எந்த சுபாவமும், எதனுடனும் சேராது. தனக்கென்றிருப்பதில் மகிழ்வடைவதில்தான் மகிமை உள்ளது. மூன்று சிநேகிதிகள்  ஊரை விட்டு டவுனுக்கு ஓடிவந்து வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த சமயம்,விண்டு போட்டாலும் விரியாதபடி இருந்தவர்கள், சில மாதங்களில் தூள், தூளாகி விட்டது போல தனித்தனியாக ஓரம் கட்டியே வாழ ஆரம்பித்து விட்டார்கள். எப்படியிருந்தாலும் வாழ்ந்தாகவேண்டுமென்றால் வீழ்ந்து, வீழ்ந்தேயாவது வாழ்ந்தே தீருவோம்.மனித மனதுக்கு பொறாமை என்பது சொல்லிக்கொடுத்து வரும் குணமில்லை. தனக்குத்தானே ஏற்பட்டுவிடுகிற ஆசைகளின் உச்சத்தில் ஏற்படுகின்ற ஒரு உணர்வு.யாவருக்குமே கொஞ்சம் பொறாமை குணம் இருக்கலாம்,ஆனால் அடுத்தவர் வாழ்வதை பார்த்தாலே ஐந்து நாட்கள் பட்டினி கிடப்பவர்களை எதிலுமேசேர்த்து கொள்ள முடியாது. பொறாமை என்பதே ஒரு நிர்பந்தத்தில் ஏற்படும் தாழ்வு உணர்வு.புலியைபார்த்து நரி வரி,வரியாக சூடு போட்டுக்கொண்டதாக கேட்டிருக்கிறோம். ஆனாலும் நரி புலியாகாது, புலியும் நரியாக முடியாது. மனிதர்களும் அதேபோல்தான் மாற முடியாது. புல்லாங்குழல் நாயனமாக முடியுமா?
அந்த காலத்தில் புல்லுக்கட்டை தூக்கி எவருக்கும் கழுத்துப்பிடிப்பு வரவில்லை.நெல்மூட்டை தூக்கி முதுகெலும்புகள் உடையவில்லை. இன்றைக்கு உட்கார்ந்து
கொண்டேயிருப்பதில் முதுகெலும்பு ஆட்டம் கண்டு விடுகிறது. பள்ளிக்கூடமூட்டையை பஸ்ஸில் எடுத்துப்போகும்போது தோள்பட்டைவலி, கழுத்துப்பிடிப்பு வந்து விடுகிறது. அந்தக்காலத்தில் பத்து பிள்ளைகளுக்கு நடுவில் கவனிப்பேயில்லாத பிள்ளைகள் படித்து தேர்ந்து பெரிய உத்யோகத்தில் அமர்ந்து விடுவார்கள். டயம் எப்படி மாறிக்கொண்டே வருகிறது என யோசிக்கக்கூட முடியவில்லை.