வாழ்நாட்களில், எதைக்காப்பாற்றி வைத்துக்கொள்வது என்பதே புரியாமல், சிலவற்றை விட்டுவிடுகிறோம். வழக்கமான சுபாவங்களுக்கு பழக்கம்தான் காரணம். சில மனிதர்கள்இருக்கிறார்கள், அவர்கள், தாங்கள் செய்பவைகளையே சரியானதென்று வாதாடுவார்கள், ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பெரியவர்கள் என்பதினால், எப்போதுமே அவர்களே எல்லாவிதங்களிலும் உயர்ந்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என நினைத்து முடிவுக்கு வருவது நம் புத்திக்குறைவையே காண்பிக்கிறது. சிறிய வயதுக்கார ஆசாமிகளுக்கும் சாமர்த்தியத்துடன், புத்திசாதுர்யமும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதுவும் இந்தக்காலத்தில் பெரியவர்களைவிட, சிறியவர்கள் மிகவும் சாதாரண வேலையைக்கூட பக்குவமாக பேசி பிறரிடமிருந்து வேலைகளை செய்ய வைத்து வாங்கிகொள்கிறார்கள். சில விவகாரங்களை தீர்த்து முடிக்க அகட, விகட சாமர்த்தியம் வேண்டுமென்பது அவசியம்.
ஆனால் நாம் எந்தவேலையை எடுத்துக்கொண்டாலும், கண்டிப்பாக முடித்தேயாக வேண்டுமென்ற நியதி ஒவ்வொருவருக்குள்ளும் வரவேண்டும். பாதியில் வேறு எங்கேயோ தாவுவது என்பது இருக்கவே கூடாது. மனோ சக்தியிருந்தால், மனோவேகத்தையும் காட்டுகிறது. இரண்டு சக்தியுமே மனிதர்களின் வாழ்நாட்களில் உபயோகப்படுத்திக்கொண்டால், நம்மால்சாதிக்க முடியாதவைகளே இருக்க முடியாது. எதையுமே செய்து வரும்போது மனம் இங்குமங்குமாக தாவி, தாவி உடல். தளர்ச்சி அடைகிறது. ஆனால் மனம் மட்டும் இங்குமங்குமாக ஓடியாடி தாவிக்கொண்டேதானிருக்கும். மனிதர்களாகிய நாம்தான் சிந்தித்துப்பார்த்து மனதை ஓட விடாமல் கவனித்து வழிக்கு கொண்டு வைத்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் கற்றுக்கொண்டு சில வேலைகளை செய்யமுடியாமலும் போகலாம். ஆனால் சுய புத்தியை உபயோகித்து, மாற்றி ,மாற்றி செய்து பார்த்து நம் புத்தி சாதுர்யத்தை அனுபவிப்பதிலும், எடுத்துக்கொண்ட பொறுப்பை முடித்தவுடன் இருக்கும் மகிழ்ச்சியை வேறெதிலும் அடைய முடியாது. மரம் ஏறுபவர்களுக்கு கீழே நிற்பவர்கள் எந்த அளவுக்கு தூக்கி விட்டு உதவ முடியும்? யோசிக்க வேண்டிய விஷயம். படிக்கவேண்டுமென்பவர்களுக்கு, புத்தகங்கள் இதர சாமான்கள் வாங்கி தந்து அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த முடியுமே தவிர அவர்களுக்குள் எதையும் செலுத்த எந்த சாமர்த்தியத்தியக்காரனும் சாதிக்க முடியாது. எப்படி புளியங்காய்க்கு புளிப்பையும், பாகற்காய்க்கு கசப்பையும் நம்மால் அளிக்கமுடியாதோ அதே கதைதான்.உதாரணங்கள் நிறைய காண்பிக்கலாம். உண்மை வாழ்க்கையில் சிலவற்றை சாதித்துக்காட்டவே தனித்திறமை வேண்டும்.
ச
Leave A Comment