காலங்கள் ஓடுவதற்காகவே ஓடுகின்றன.ஆனால் நாம் நினைக்கிறோம், நம்மால் எதையுமே நிறுத்தவும், நடத்தவும் முடியுமென நினைத்து இறுமாப்பு கொள்கிறோம். நம்மீது உள்ள பரம நம்பிக்கையின் அஸ்திவாரத்தின் எதிரொலிதான் அது. ஆனால் தன்னம்பிக்கையே இல்லாது போய்விட்டால் ஓடுகின்ற மூச்சு கூட படாரென்று நின்றுவிடலாம். உயிருக்கு ஊசலாடுபவரிடம் உனக்கு வியாதி என்று எதுவுமேயில்லை, இப்போது படுக்கையில் கிடப்பதுகூட உனக்கு ஒரு ஷாக் கொடுக்க ஆண்டவன் தந்திருக்கும் பரிசு, அதைவிட்டு வெளியில் வந்துவிடவேண்டும் என மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கு கூறினால்,அட, இதற்காகவா நான் இத்தனை மனம் நொந்துவிட்டேன் என நினைத்து தனக்குத்தானே தைர்யத்தை வரவழைத்து விட்டுக்கொண்டுவிடுவார்கள் என்பது உண்மையே. நம்மனதுதான் நம்க்கு முதல் சிநேகிதம், மற்றவைகள் வரிசைக்கிரமமாக பின்னால் வரும் என்பது உண்மையே.
நாம் நம்மால்தான் வாழ்கிறோம், நம்மாலேயேதான் வீழ்ந்தும் விடுகிறோம். ஆனால் பலருக்கு எதுவும் புரிபடுவதற்குள் காலங்கள் மாறி விடுகின்றன.நாம் எதை செய்வதற்கும் நம்க்கு கிடைத்திருக்கும் நேரத்திற்குள்,செய்துவிட்டு கரையேற வேண்டும். ஆகையால்தான் பெரியவர்கள் கூறுவார்கள், நல்லவைகளை
நிறைவேற்ற நேரம்,காலம் பார்க்க அவசியமில்லை, நினைத்தவுடன் செய்ய ஆரம்பித்து விடவேண்டும் என்பார்கள்.பலருக்குமே வாழ்க்கை புரிபடுவதற்குள்வெகு தூரம் போய்விட்டாற் போன்ற அனுபவம் ஏற்படுகிறது.இந்த அற்ப உலக வாழ்க்கை நம்க்கு எத்தனை போதித்திருந்தாலும் கூட நாம் நம்மை எதற்கும் தயாராக்கி வரவேண்டியது அவசியமாகிறது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும், இல்லை கடந்துபோன காலங்களையும் திரும்ப மனதில் கொண்டு வந்து பார்த்தோமானால்தான் எந்த இடத்தில் தவறிவிட்டோமென புரிந்துகொள்ள பார்க்க முடியலாம்.
Leave A Comment