விவாகத்தில், விவாதம் அதிகமாகி விட்டால் அபஸ்வரம் தட்ட ஆரம்பித்து விடும் என்பது நிச்சயமே. எதை வேண்டுமானாலும் வாய்ப்பேச்சில் பேசுவது சுலபமே. நீண்ட நாட்களுக்கு இருக்கப்போவதால் அளவுடன் பேசி , அளவோடு வாழ்ந்தாலே சரியாக இருக்கும். வள,வளவென்ற பேச்சும், வழக்காடும் சுபாவத்தையும் அறவே கத்தரித்து விடுவது மிகவும் அவசியம். வீட்டில் பிள்ளைகள் வளரும் போது,மிகவும் கண்காணிப்புடனும், அதி ஜாக்கிரதையாகவும் கவனித்து வளர்த்த வேண்டும். அவசியமில்லாத பேச்சுக்களையும், அதிகாரதோரணையையும் காண்பித்து தடுக்கி விழுந்து விடாமலிருந்தாலே போதுமானது. விவாகமாகும் வரை, விவாகமாகுமா, சரியான இடமாக கிடைக்குமா, நம் பிள்ளைக்கு, பெண்ணுக்கோ,ஒத்துவருமா என்றெல்லாம் கவலை மண்டையை உடைக்கும். நம் கால நேரங்கள் சரியாக இருப்பதுடன், நமக்கேற்றாற் போல் எதுவும் கிடைத்துவிட்டால், எதுவுமே மகிழ்ச்சிக்குரிய விஷயமேதான்.ஆனால் சிலமனிதர்களின் சுபாவத்திற்கேற்றாற்போல் வாழ்வு அமையாவிடில், ததிங்கிணத்தோம் போட்டுத்தான் காலத்தை ஓட்ட வேண்டிவரும்.ஆனால் நிறை கேஸ்களில் ஆட்டம் அடங்கிவிடுகிறது,இரண்டு பக்கமுமே என்பதும் உண்மையே.
அடங்கினால் பாய்வதும், பாய்ந்தால் வார்த்தைகள் வளர்வதும் உண்மையே. வேண்டாத வம்பை வளர்க்க வேண்டாமே, என வாய்க்கு பூட்டுப்போட்டு விட்டால் அடங்கியிருப்பதும் குதித்துக்கொண்டு வெளியில் வரும்.
Leave A Comment