எதை எதிர்பார்த்து வாழ்கிறோமோ அது கிடைப்பதில்லை. எந்தவாழ்வை ஆண்டவன் அருளியிருக்கிறானோ அது நம்க்கு பிடிப்பதில்லை.ஆனால் யாவருமே ஒரு ஆவலில் எதையோ எதிர்பார்த்துக்கொண்டுதான் வாழ்ந்துவருகிறோம். அது கிடைத்துவிட்டதா, கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில்தான் காலத்தை ஓட்டுகிறோம்.மீனாட்சிக்கும் அதேபோல்தான் வாழ்வு அமைந்துவிட்டது.அவளுக்கும், அவளுடைய கணவருக்கும், சதா வாக்குவாதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.ஆனால் யாரிடமாவது அதைக்கூறினால் எங்கள் வீட்டிலும் இதே கதைதான் என பொய் சொல்வார்கள்.அதை நம்பிக்கொண்டு, மீனாவும், ஓ! எல்லோர் வீட்டிலும் இதே கதைதான் என்கிறார்களே என ஒரு அசட்டு நம்பிக்கையில், நம்வாழ்வு ஒன்றும் தனியாகயில்லை, எல்லோருக்கும் இந்த வாழ்விலும் அடிக்கடி சூறாவளி அடித்துக்கொண்டுதான் இருக்கிறது என மனதில் தனக்கு மட்டும் மனகசப்பு இல்லை, யாவருக்குமே உள்ளது எனநினைத்து இருந்தாள். ஆனால் இந்த உலக வாழ்க்கையில், உண்மை கூறுபவர்கள் எத்தனை குறைவாக இருக்கிறார்கள் என்பதே புரியாமல் மீனா பலகாலம் வாழ்ந்து விட்டாள். வீட்டுவேலைகளை தவிர வேறு உலகமே தெரியாத அவளுக்கு வீடே சுவர்க்கமாக இருந்தது.பிள்ளைகள் வளர்ப்பதை கண்ணும்கருத்துமாகவும், கணவருக்கு வேண்டியவைகளை அவளுடையை பிரதானமானகனவு எனவும் நினைத்து வாழ்ந்து வந்திருந்தாள். நான்கு பிள்ளைகளும் மேல் படிப்பெல்லாம் படித்து வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்ததும் வெளியில் போய்தங்கும்படியான சந்தர்ப்பமும்,கிடைத்து கிளம்பி விட்டார்கள். மீனாட்சிக்கும் பரமதிருப்தி, நம்பிள்ளைகளும் தன் சிநேகிதிகளின் பிள்ளைகளுக்கு சரியாக உயர்ந்துவிட்டார்கள் என்பதில் திருப்தியடைந்தாள். நாம் நம் வாழ்நாட்களில் எப்போதுமே நம்மை பிறருடன் ஒப்பிட்டு பார்த்துத்தான் மகிழ்வடைகிறோம். பெண்மணிகளுக்கென்றே தனியான கனவே இதுவரை கிடைக்கவில்லை!!!!கூட்டு கனவுதான் காண்பார்கள்.

மனதுக்குள் ஒரு குறையோ அல்லது அவளாக நினைத்துக்கொண்டாளோ தெரியாது,பிள்ளைகளுக்கும் தனக்கும் நடுவில் ஒரு அதலபாதாளம் ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தாள்.பிள்ளைகளுக்கு தங்கள் பெரியபடிப்பு உத்யோகம் எல்லாமே எப்படிவந்திருக்கும் என நினைத்துப் பார்க்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுடைய லடசியம் அதுதான் இருந்தது. வீட்டிலிருந்து உதவுபவர்களுக்கு பிள்ளைகளின் அந்த லட்சியம் பூர்த்தியாக வேண்டுமென்ற எண்ணம் ஒன்றுதான் இருக்கும். ஒன்றை முடித்தவுடன் அடுத்த இலக்கை கவனித்துக்கொண்டே வளர்வார்கள் பிள்ளைகள். ஆண்கள், கண்குத்தி பாம்புகள் மாதிரி அதாவது கணவன்மார்களும் தந்திரமாக மனைவியிடமிருந்து வேலைகளை வாங்குகிறோம் என்பதையே தெரிய விடாமல், பசப்பு வார்த்தைகளை உபயோகித்துவேலை வாங்குவார்கள்.நிறைய ஆண்கள் பெண்மணிகளின் மனதிற்கு பிடித்தாற் போல் பசப்பு வார்த்தைகளைகூறி வேலைவாங்குவார்கள். மங்கு, மங்கென்று இடுப்பு ஒடிய வேலைகளை வாங்கிவிட்டு, பிற மனிதர்களின் எதிரில் என் சொன்ன பேச்சை இவள் என்றுமே கேட்டதில்லை என பெண்மணிகளை சாடுவார்கள், வீட்டிற்கு வருபவர்கள் எதிரில். எல்லாமே நடிப்புதான். ஆண்களுக்கு ஏன் இடுப்பு உடைவதில்லை? தன்னை நன்கு கவனமாக பார்த்துக்கொண்டு வேளா, வேளைக்கு சாப்பாடு தூக்கம், வேளைக்கு காப்பி போன்ற பானங்களை உறிஞ்சிக்கொண்டு பெண்மணிகளின் உடல்நலங்களையும் உறிஞ்சிவிடுவார்கள். உலகமே ஒரு நாடக மேடைதான்.