வயதான கணவன் மனைவிக்குள் யார் முதலில் இந்த உலகத்தை விட்டுக்கிளம்பவேண்டுமென்பதற்காக தகராறு வரும். பேச்சு வார்த்தைகள் நடக்கும். அந்த சச்சரவின்போது மனைவி கூறுவாள்,நான் முதலில் கிளம்பிவிட்டால்தான் என் வாழ்வின் அருமை உங்கள் யாவருக்கும் புரியும் என அம்மா கூறுவாள்.உடனடியாக அடிபட்ட வேங்கை மாதிரி அப்பா பாய்ந்து வந்து நான் போய்விட்டால்தான் என் மதிப்பு உங்கள் யாவருக்குமே புரியும் என விதண்டாவாதமாக கிண்டலாக பேசுவார்.ஆனால் எவருமே கிள்ம்ப தயாராக இல்லாதபோது பேசும் பேச்சாகவே இருக்கும்.ஆனால் உயிரிழக்கும் தறுவாயில் ஆண் கண்கள் கலங்க கூறுவார், நான் கிளம்பிய பின் நீ எப்படியிருப்பாயோ என்று ஆதங்கப்படுவார்.ஆனால் நான் என் வாழ்நாட்களில் எதைசெய்து கொடுத்தபோதிலுமே என்மீது நம்பிக்கையே இருந்ததில்லை என அங்லாய்ப்பார்.
நான்தான் உனக்கு உண்மையாக இருந்திருக்கிறேன்,ஆனால் நான்தான் உனக்காகவே எதை செய்திருந்தபோதிலும் உனக்கு என்னிடம் நம்பிக்கயில்லையென கூறி வருந்துவார்.
உங்களைப்போன்ற ஆண்கள் பெண்மணிகள் உங்களுக்காக எதை செய்திருந்தபோதிலும் வாழ்க்கையில் புகழ்ச்சியும் கேட்டதேகிடையாது என பெண்மணிகளும் பதிலடி கொடுப்பார்கள். தன் வீட்டு மனிதர்கள்மாதிரி எவருமே கிடைக்கமாட்டார்கள் எனக்கூறி அவர்களுடன் சேர்ந்து நீங்களும் என்னை குற்றம் கூறியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் கூறியதெல்லாம் உங்களுக்கு மறந்துவிட்டதுஎனக்கூறிமுற்றுப்புள்ளி வைக்கப்பார்ப்பார்கள். மனம் உருகி கோபம் வளர்ந்துவிடும்.ஆனால் மறுபடியும் அனலில் இட்ட நெய் மாதிரி பற்றிக்கொண்டு எரிகிறது என மனைவிசாடுவாள்.

நான் இன்னம் எத்தனை காலம் இருப்பேனோ தெரியாது, நான் கிளம்பிவிட்டேனானால்தான் என்னுடைய அருமை உங்களுக்கு தெரியும் என மூக்கை துடைத்துக்கொண்டு திருப்பிக்கொண்டு போவாள். என்வாழ்க்கையில் நான் எனக்கென்று எதையுமே வைத்துக்கொண்டதில்லை என அப்பட்டமான ஒரு புளுகையும் விசிறியெறிவார்கள்.
முக்கல், முனகலுடன் ஒரு அழுகையை வரவழைத்துக்கொண்டு குரலை உயர்த்தாமல் குரலை கம்ம வைத்துக்கொண்டு பேசுவார்கள். உடனே ஆண் சிங்கம் போல் பாய்ந்து வந்து இந்தஅழுகைதான் பெண்களின் பலம் எனக்கூறி, எனக்குபிடிக்காதகுணம் இதுதான், இது நல்ல ஆயுதம் கிடையாது எனக்கூறிசட்டையை மாட்டிக்கொண்டு பாய்ந்துக்கொண்டு வந்து வெளியில் கிளம்பபார்ப்பான். நான் என்ன பிரமாதமாக செய்திருந்தாலும் எனக்கு என்ன பரிசு கிடைத்தது? நான் செய்த எதற்குமே எனக்கு என்ன பரிசு கிடைத்ததுஎனக்கூறி மூக்கை சிந்திக்கொண்டு பெண்மணி கிச்சனுக்குள் போவாள், வீர ஆண்மகன் சட்டையை மாற்றிக்கொண்டு வெளியில் கிள்ம்ப பார்ப்பதுடன் அன்றைய கதை முடிவடையாது.