மனதை திறந்து கொட்டமுடியாத வாழ்க்கையை என்னவென்று கூறுவது? உலகம் முழுவதும்மனிதர்களால், நிரம்பி வழிகிறது ஆனால் தன்க்கென எவரும் கிடையாதென்றால் துக்கம்தான். காலையில் ஆரம்பித்தால் இரவு எப்போதுதலை சாய்க்கிறோமோ,அதுவரை வேலை,வேலைதான். சும்மா உட்கார்ந்திருந்தாலும், புத்தி அலை பாய்கிறது.வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பும் போதும் புது,புது எண்ணங்களால் அலைக்கழிக்கபடுகிறோம். குடும்பசண்டைகள் மிகவும் சாதாரணம்தான் என்றாலும்,எதையுமே சரிசெய்து விட்டுக்கொண்டேதான் வாழவேண்டும். தண்ணீரிலிருந்து தண்ணீரைப்பிரிக்க முடியாது. நாம் சரிசெய்துகொண்டு நடக்காவிடில் தானாக சரியாகி விடமுடியாது. ஆபத்து என்பதையும்,ஆனந்தம் என்பதையும் பகிர்ந்து கொள்ள தன்க்கென மனிதர்கள் இல்லாவிடில், அந்தக்குறையை நீக்க யாரும் ஈடு கட்டமுடியாது.

வாழ்வின் ஆரம்பமே சூறாவளி கலக்கத்துடன் ஆரம்பித்து விட்டபடியால்,எதையும் சமாளித்துவிடமுடியும்தன்னால் என நினைத்த அன்னபூர்ணாவிற்கு, பிள்ளையை இழந்ததுதான் பேரிடியாகி விட்டது.தான்,தாயில்லாப்பிள்ளைஎன்ற தன் ஞாபகத்தை களைந்து எறிவதற்கு முன்னால், தன்பிள்ளைகள் தகப்பனில்லா தறுதலைகள் ஆகிவிடுவார்கள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. கணவனை இழந்தாலும், தனக்குள்ள வேலையை வைத்துக்கொண்டு பிள்ளையை வளர்த்து காலத்தை ஓட்டிவிடலாம். என நினைத்த அன்னபூரணாவிற்கு, பிள்ளைக்கு டெங்கு காய்ச்சலில்உயிரே போய்விடும்எனகனவில்கூட நினைத்ததில்லை. கிராமங்களில் வாழ்ந்தால் டாக்டர்கள் சரியில்லை, வைத்தியம்சரியில்லையென கூறுவோம். டவுனில் வாழ்ந்தோமானால் எமனை ஏமாற்றிவிடலாமென மனிதர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் எமனுக்கு அவன் கணக்கை பூர்த்திசெய்து வேண்டுமே! மேலிடத்து உத்திரவை முறித்து மாற்ற எவருக்குமே சக்தி கிடையாது, என்பது நம்க்கு தோன்றுவதில்லை.
எந்ததுக்கமுமே, தன்க்கென வரும்போது அதன் கொடுமை பரிபூரணமாக தெரியும்.ஆண்டவன் யாருக்கு எதை கொடுத்து, எதை எடுத்துக்கொண்டுவிடுவான் எவருக்குமே புரியாத புதிர்தான். பிள்ளைகளுக்கு கண்டிப்பு காய்தாகாட்டி வளர்க்க தகப்பனில்லாவிட்டாலும், தன்மனதை கணவனிடம் திறந்து கொட்டுவது மாதிரி ஒரு வடிகால் இல்லாவிடில் பெண்மணிகளுக்கு வாழ்வில் எதுவுமே கிடையாது. நாம் எதைக்கொட்டினாலும், தன் கணவன் தன்க்கென ஒரு கர்வம் பெண்மணிகளுக்கு எப்போதுமே உண்டு. பெண்மணிகளை சமயம் வரும்போது காலை வாரி காட்டிக்கொடுக்கும் கணவர்களும் உண்டு. அவரவர் தலைவிதி அது.

குடும்பங்களில் சண்டை,சச்சரவுகள் என்பது சாதாரண விஷயம்தான், ஆனால் பிள்ளகளை இழப்பது அசாதாரணமேதான். கணவனை இழந்தால் நம் துணையை இழந்துவிடுவோம், ஆனால் பிள்ளையை இழந்தோமானால், தன்னுயிர், சதையுடன் கூடிய தன்னுடைய ஒரு பிரதி பிம்பத்தையே இழந்துவிடுகிறோம்.கணவனில்லா வாழ்வில் பிள்ளையை பார்த்து, பார்த்து பெண்மணிகள் தைர்யமே அடைவார்கள். பிள்ளையை இழந்தால் தன் ரத்தம் என்பதால் அந்த துக்கத்தை களைந்து எறியும் மனம் இந்த வாழ்நாளில் எந்நாளும் முடியாது, மனக்கதவு மூடிக்கொண்டு விட்டால் திறக்கப்பிடிக்கவில்லை.