உறவுகள் சிலசமயங்களில் பாரமாகவேயிருக்கும்.பல நேரங்களில் உணர்வுகளை உசுப்புகிறது என்பது உண்மையே. அடிக்கடி சந்தித்தால் அலுப்பு தட்டுகிறது. சந்திப்போமா இல்லை, இனிமேல்சந்திக்கவே சந்தர்ப்பம் கிடைக்காதோஎன நினைத்தால் பீதி ஏற்படுகிகிறது.அடிக்கடி சந்தித்துவிடாமல் போய்விட்டால் கனெக்ஷன் துண்டித்து விடுமோஎனவும் தோன்றுகிறது. நமக்கென்றிருக்கும் ரத்த பந்தங்கள் நமக்கே நமக்கென்றிருப்பதில்லை. அவரவர்கள் வாழ்க்கைக்கு தேவைப்பட்டபோது சந்தித்துக்கொண்டு, கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் உபயோகித்து கொண்டுவிடவேண்டும்.ஒரு கொடியின் மலர்களை பலரும் எடுத்து கொடுத்து விட்டதால்,அவரவருக்கு தேவையானவைகளையே தேர்ந்தெடுக்கவேண்டியும் வருகிறது.
உற்றார், உறவினர், சிநேகிதங்கள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்வேயில்லை. மிருகங்கள் கூட கூட்டத்தில் வாழ்கின்றன. ஆனால் மிருகங்கள் கிடைத்தவைகளை உண்டு விடும். இன்னொரு மிருகம் போட்டிக்கு வந்தால் அதை துரத்தியடித்துவிட்டு, தானும் உண்ணாமல் உணவுக்கருகிலேயே உட்கார்ந்துகொண்டு காவல் காக்கும். அதற்கே அலுப்பு தட்டி நடை போட கிளம்பி எங்காவது போகும் நேரம் பார்த்து கிளம்பி போய்விட்டால், இதையே கபளீகரம் செய்து விட விரும்பி காத்திருந்த பறவையோ, மிருகமோ ஒரே வாயில் அள்ளிக்கொண்டு ஓடிவிடும்.
ஆனால் ஒருசில உறவுகள் நம்மையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி தங்களையும் தலை தூக்க விடாது செய்து கொண்டு விடுகிறார்கள். ஆனால் உறவு என்பதை அழித்துவிடமுடியாமலும் திண்டாடுகிறார்கள்.
Leave A Comment