காலம் மாறிவிடுகிறது, வயது முதிர்வடைகிறது, ஆனால் மனிதர்களின் துர்குணங்கள் மட்டும் மாறுவதேயில்லை. குற்றம் கண்டுபிடிப்பவர்களுடன் காலம் கடத்துவது கடினமான நேரமே. மனம் முதிர்ச்சியில்தான் அவரவர்கள் மனம் மாற வேண்டும்.தண்ணீரைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. சண்டைபோட வேண்டுமென்றால் யுத்தகளத்தில் இறங்கியே ஆகவேண்டும். தன்னை விட பெரியவர்களிடம் எதிர்த்து பேசக்கூடாது என்ற வரைமுறையுள்ள குடும்பங்களில் பிறந்து வளர்ந்திருந்தால் மிகவுமே கடினமாகத்தான் வாழ்ந்தே தீரவேண்டும். ஏனென்றால் நல்லதும்,கெட்டதும் ‘தொட்டில்பழக்கம் சுடுகாடு’ மட்டும் என்பது போல்தான். பேச்சுக்கு பேச்சு எதிர்பேச்சு பேசுவது என்பது பழக்கத்தில் வரும் ஒன்றுதான். நல்லதோ கெட்டதோ எதற்கும் ஒரு வரை முறை உள்ளது.பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தேயாக வேண்டும் என்பதையே கண்டிருதாவர்களுக்கு திடீரென்று மரியாதை கிடைக்க ஆரம்பித்துவிட்டால் துள்ளல் அதிகமாகவேயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எதுவுமே அவரவருக்கு வரும்போதுதான் தெரியவரும். நமக்கென்றிருப்பதில்தான் நம்க்கு திருப்தி. பிறர் வாயில் சர்க்கரையை போட்டுவிட்டால் நம் நாக்கில் இனிப்பு தெரியுமா, இல்லையேல் இனிப்பு என்று நாக்கில் எழுதி தடவினால் இனிப்பு நாம் உணர முடியுமா? இதுமாதிரிதான் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் இருக்கிறது.பிள்ளைகள் இருந்தால் ஒத்து வாழ்வதை பெரியவர்களும் பழக்கிக்கொள்ளவேண்டும், சிறியவர்களிடம் எந்தமுறையில் வேலை வாங்கவேண்டும், எப்படி அன்பாக பேசி வேலைகளை கற்றுக்கொடுத்து, செய்துவருகிறார்களா என கவனித்து தவறுகளை குத்திக்காட்டாமல் கற்றுக்கொடுத்து, இளையதலைமுறைக்கு வழிகாட்டி உருவாக்கவேண்டும்.நாம் செய்தபடியே யாவரும் செய்துவரவேண்டும் என நினைப்பது நம் புத்திக்குறைவையே காண்பிக்கிறது. கோபத்துடன் பேசும்போது நாம் என்ன கூறுகிறோம் என நமக்கே தெரியாமல், எதையாவது உளறி கொட்டுவோம்.யாராவது நாம் கூறியதாக கேட்கும்போது வெட்கம் தலை குனிகிறோம். இது அவசியமில்லாத ஒரு அவமானம் பேசியவர்களுக்கு.

வாழ்க்கையின் நோக்கமே நாம் நம் பிள்ளைகளை நம்மைவிட உயர்வாக வளர்த்திட வேண்டுமென்பதுதான். ஆனால் அது நம்கையில் இல்லை என்பதையே புரிந்து கொள்ளாமல் நாம் கனவு கொண்டோமானால், கனவை உண்டாக்கியவன் மீதே குற்றம்குறைகள் போட்டு விடலாம்.