முன் காலத்தில் தீபாவளிக்குமட்டுமே பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள் கிடைக்கும். இன்றைக்கோ நினைத்த போதெல்லாம் புதிய துணிமணிகளை வாங்கி குவிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு திருப்தியில்லை,பெற்றவர்களுக்கும் மகிழ்ச்சியில்லை. பெற்றோர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் செலவழிக்க பார்க்கிறார்கள், பிள்ளைகளோ லேட்டஸ்ட்,மற்றும் எவரிடமுமே காணாத புதிய துணிமணிகளை வாங்குவதற்கு அலைகிறார்கள். இதனால் வீடுகளில் சதா வருத்தம் மேலிட்டு எது கிடைத்தபோதிலும் மனதில் திருப்தியில்லை.பெற்றோர்களின் பட்ஜெட்டில் எத்தனை துண்டுகளை வெட்டினாலும் ஒட்ட வைத்து உருவாக்கமுடியாது. படிப்பிற்காக செலவழிப்பதற்கு என்பதற்கு கணக்கேயில்லை. எதுவுமே அதிகப்படியாக எதிர்பார்க்கும் நேரம் வந்துவிட்டால்,
மனதில் அதிருப்தி கூடிவிடுகிறது.
எங்கு திரும்பினாலும் என்ஜினீயர்கள், கம்ப்யூட்டரில் மட்டுமே வேலை செய்யத்தெரிய வேண்டுமென்பதை மனதில் புகுத்தி விட்டபடியால் இன்றைய பிள்ளைகளின்
மனதிலிருந்து அதை வெளியில் எடுத்து விட்டெறிந்து விடுவது என்பது சாத்தியமில்லை.பிறந்த பிள்ளைக்கு கூட பரிசு பொம்மை கம்ப்யூட்டர்தான் கொடுக்கிறார்கள். இன்னம் கொஞ்காலத்திற்கு பின் மனித மூளையையே கம்ப்யூட்டரில் போட்டு விடுவார்கள் போலுள்ளது. பிள்ளைகள் கம்ப்யூட்டர் என்று சொன்னால்தான் எதையும் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தையும் அடைந்துவிட்டார்கள். எவரைக்கேட்டாலும் கம்ப்யூட்டரில் வேலை செய்வதாகத்தான் கூறுகிறார்கள். ஏனெனில் பாமர மனிதர்கள் கம்ப்யூட்டர் என்பது வைகுண்டத்திலிருந்து வந்தாற்போல் பேசுகிறார்கள். கம்ப்யூட்டர் என்பது டைப்ரைட்டர் போல் ஒரு சிம்பிள் மெஷின்தான். அதை எப்படி உபயோகிக்க வேண்டுமென்பதை கற்றுக்கொள்ள தனித்திறமை தேவையில்லை. டைப்பிங் மெஷின் போல்தான் உள்ளது. ஆனால் கம்ப்யூட்டரில் நம்க்கு வேண்டுமென்கிறாற் போல் வேலை செய்யவே நாம் பாடம் கற்க வேண்டும்.
கம்ப்யூட்டருக்கென்று தனி பாஷைகள் உள்ளன. அவைகளை கற்றுக்கொள்ள கிளாஸ் போகவேண்டும். புத்தகங்கள் மூலம் அதைகற்றுக்கொண்டு வந்தபின்னர் நாமும் கம்ப்யூட்டருக்கு வேலை கொடுத்து வேலை வாங்கவேண்டும். ஆரம்பத்தில் எதுவுமே கடினமாகவேயிருக்கும்.வேலை செய்து வந்தோமானால் பழக்கமாகிவிடும். இப்படியாக ஒவ்வொரு வருடமும் புதியவைகளை அறிமுகப்படுத்தி உலகத்தை கலக்கிவிடுகிறார்கள். கம்ப்யூட்டர் ஜாதகம் பார்க்கும்,வியாதியை பற்றிக்கேட்டால் மருந்து சொல்கிறது, சண்டையைப் தவிர்க்க வேண்டுமென்றாலும்,கிளப்பவேண்டுமென்றாலும் கற்றுக்கொடுத்து விடுகிறது. மனித மனத்திற்கு சமாதானம் கூறுகிறது. கம்ப்யூட்டர் உயிரற்றபடியால் நம்முடன் சேர்ந்து சிரிக்காது, நமக்காக அழாது. நம்முடன்மற்றும் உறவு கொண்டாட முடியாது.இதுதான் கம்ப்யூட்டர் யுகத்தின் மகத்துவம்.
Leave A Comment