வசுந்திராவிற்கு கூடப் பிற்ந்தவர்கள் நான்கு சகோதரிகளும் ஒரே ஒரு அண்ணனும் உண்டு.கணவன் எத்தனை அருமையாக இருந்தாலும், தன் சிறிய வயது ஞாபகம் யாவருக்குமே வந்தகொண்டேதான் இருக்கும். தவறொன்றுமில்லை,ஆனால் எதையுமே அறியாத வயதில் அறிந்துகொண்டு பார்க்காத படியால் சில கடினமான சமயங்களை எதிர்நோக்கியே ஆகவேண்டும். தன் உடன்பிறப்புகள் தனக்காகவேதான் வாழ்வதாகவும் சிலர் நினைத்து கூடப்பிறப்புக்களிடம் ஏமாற்றமடைகிறார்கள். தாயும்,சேயுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறுதான் என்பதை உணரவேண்டும்.எதையும் எதிர்கொண்டு பார்க்கும்போது உண்மை விளங்காது. ஏனென்றால் சொந்த பலத்தைவிட ரத்தபந்தத்திற்கு ஆகர்ஷிக்கும் சக்தி அதிகம் பெற்றது. சிலநேரங்களில் நம்க்கு நம்சொந்த ரத்த பந்தங்களை மனதாரவும்,உண்மையைவிட மேலாகவும் நம்புவோம்.ஆனால் துரோகம் செய்யக்கூடிய மனம் எங்குமிருக்கலாம்.இதற்கெல்லாம் ஒரு வரைமுறை கிடையாது. ஏமாறும்போது மட்டுமே தெரியும், நம் ரத்தமும் நம்மை ஏமாற்றும் என்பது. இதற்கு தனிப்பட்ட ஆண்மை பலமோ, பெண்மையின் கல்மிஷம் தோய்ந்த மனமோதேவையில்லை. மனித மனமேதான் அதுவும்.எந்தவிதமான தியாகத்தையும் செய்து தன்னைக்காப்பாற்ற வருவார்கள் என நினைத்து ஏமாறக்கூடாது.நேரத்திற்கு தகுந்தாற்போல் புத்தி மாறிவிடுகிறது. அதுவும் இந்த கலியுகத்தில் காவல் காத்து காப்பாற்றக்கூடியவைகள் எதுவுமில்லை, காப்பாற்றபடவும் முடியவில்லை.
நீ எங்களுக்கு ஒரே ஒரு சகோதரியில்லை. ஆனால் நம் பெற்றோர்கள் உன்னை மட்டும் கண்ணுக்குள் வைத்து இமையால் மூடிவைத்து அருமையாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்தார்கள். நம்மிடம் எந்த பலவீனத்தை எதிர்பார்த்துப்பேசுவார்களோ,அதை ஆண்டவன் கூட கண்டு பிடிக்க முடியாது.உன்னைப்போல் ஒருசகோதரி கிடைக்க நாங்கள் பூர்வநாட்களில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். நீ அறுவரில் ஒருத்தியென்றாலும் உன்னிடம் மட்டுமே எங்களுக்கு பாசம் அதிகமாகவே உள்ளது என இப்படியெல்லாம் நைச்சியமாக பேசும் நேரத்தில்,தங்களுக்கு வேண்டியவைகளை சாதித்துக்கொள்ள பேசுவதாக அந்த ஒரே ஒரு மந்தி சகோதரி நினைத்துக்கொள்ளவே மாட்டாள். ஏனென்றால் தனக்காக எந்த நிமிடமும் உயிரைக்கொடுக்கவும் தன் சகோதர்ர்கள் காத்திருப்பார்கள்,என நினைத்து, சகோதரி இந்த சாகச பேச்சுக்களைக்கேட்டு,கேட்டு பூரித்தே போய் விடுவாள். அப்படிப்பட்ட சகோதரி சகோதர்ர்கள் இன்றுமட்டும் பிறந்துள்ளதாக தெரியவில்லை. எந்தப்பக்கம் திரும்பினால் என்னவிதி கிடைக்குமென்று புரியாத புதிர்தான் இந்த நேச பந்தங்கள்.
ஆனால்,அதே சகோதரிக்கு பிரச்னைகள் வந்துகொண்டேயிருந்து அந்த நேரத்தை சரியானபடி தவிர்க்கதெரியாவிடில், உன்னை படிக்கவைத்து என்ன பிரயோஜனம், உனக்கு எதையுமே கையாள தெரியாமல் திண்டாடுகிறாய் என நினைக்கிறேன்,என்றும் கூறுவார்கள். படிப்பு என்பது எதைவேண்டுமானாலும் சாமர்த்தியமாக கையாண்டு விடும் என நினைப்பது எத்தகைய பேதமையான எண்ணம் என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்.பெயர் தெரியாத ஊரில்
வழி தெரியாத சாலையில் நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்ப்பது போல் உள்ளது.
Leave A Comment