எந்தக்காலமானாலும் சரி ஒருவருக்கொருவர் உதவியில்லாமல் எதையும் சாதிக்க முடிவதில்லை. ஆனால் வாழ்நாளில் நம்யாவருக்குமே எத்தனையோ உதவிகள் தேவைப்படுகிறன்றன. பிள்ளை குட்டிகள் இருந்துவிட்டால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.அதுவும் நாம் சிறிது கண்ணயர்ந்து விட்டாற் போலிருந்தாலே போதும், அவர்கள் பெற்றோரை கவிழ்க்க செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். அதிலும் அவர்களுக்கு வெளி உபதேச அழுத்தம் வேறு கிடைத்து விட்டால் தலைகால் புரிவதில்லை, கூத்தாட ஆரம்பித்து விடுகிறார்கள்.ஆகையால் வெளிநாட்டவர்கள் போல், அவரவர் தன் மனம் போல மாங்கல்யத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு பிறர் மனம் போல வாழ கற்றுக்கொள்ள பழகவேண்டும்.
காலத்தின் அவசரத்திற்கு ஈடு கொடுக்க முடியாது, வேறு வழி தெரிந்தாலும் வெளியில் கிளம்ப முடியாமல், அதே குடும்ப சகதியில் உழன்றுகொண்டு பலர் திண்டாடியபடியேதான், வாழ்ந்து வருகிறார்கள். பிள்ளைகள் என்பவர்கள் சில குடும்பங்களில் அணில்பிள்ளைகளாகவும், கீரிப்பிள்ளைகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.அணில்பிள்ளை என்பதற்கு சக்தியேகிடையாது. கீரிப்பிள்ளைகள் கூட்டத்தில் வாழும். கீரிப்பிள்ளைகள் கூட்டத்தில் வாழ்வதற்கு காரணம், பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி, ஆனால் ஒரு பாம்பை கீரிப்பிள்ளை பார்த்து விடநேர்ந்தால்,பாம்பு ஓடி மறைந்துவிடும். ஆனால் அந்த மாதிரி வீட்டிற்கு ஒண்ட வந்த பெண் பாம்பாக இருந்தால் வீட்டின் நிலைமை எப்படியிருக்கும் என யோசித்து பார்க்கும் பொறுப்பை அவரவர்களே ஏற்றுக்கொண்டு நிதானமாக டயம்கிடைக்கும்போது, மன ஓட்டத்தை மறுபடி நினைவில்கொண்டுவந்து யோசித்துப்பார்த்து முடிவெடுங்கள்.
Leave A Comment