வாழ்க்கையில் நாமே சிறந்து விளங்குபவர்கள், நம்மைப்போல யாருமே நல்லவர்களாக விளங்கவே முடியாதது போல நினைத்தே வாழ்கிறோம். ஆனால் எந்த விஷயமானாலும், உலகம் என்ன சொல்லுமோ, எவர் என்ன சொல்வார்களோ என நினைத்தும் மறுகுகிறோம்.
எங்கள் குடும்பத்தில் இரண்டு சந்ததிகளுக்கு முன்பாக, ஒருபெரியவர் இளம் மனைவியை சிறிய வயதிலேயே இழந்து விட்டதால் பிள்ளைபேறும் அடையாது, தனிகட்டையாக வாழ்ந்துகொண்டிருந்தார். தேசீயபணியில் ஈடுபட்டு, பிரசாரங்கள் செய்வது, ஏழை, எளியவர்களுக்கு வேலைவாங்கிதருவது, சர்க்கார் ஆஸ்பத்திரியில் மருத்துவம் செய்துகொள்ள சிபாரிசு செய்து அனுப்புவது போன்ற உதவிகளை செய்து வரும் நாட்களில், விதவையான தன் உறவில் வந்த மகளின் கணவர் கல்யாணமாகி நான்கு வருடங்களில் ஒரு பெண்பிள்ளையை பெற்ற பின், தவறி விட்டார். அவர்களை காப்பாற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டார். அந்த பெண்மணியையும்,பிள்ளையையும், அவளுடைய தாயாரையும் காப்பாற்ற சபதம் எடுத்துக்கொண்டதோடுமல்லாது நடத்தியும் காட்டினார். உற்றார்,உறவினர்கள், குடும்பத்தினர் எத்தனையோ கூறியும், தான் எடுத்துக்கொண்ட வேலையை செய்தே முடிக்க தீர்மானித்துக்கொண்டு கடைசிகாலம் மட்டும் நிறைவேற்றினார்.
நம் மனதை நம்கண்டரோலில் வைத்துக்கொண்டு நமக்கென சில சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு நாம் வாழ்வது நம் மனதுக்கு பலத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன் வைத்த காலை பின்வாங்காமல் இருக்க நம் மனோதிடம்தான் வழிகாட்டும்.உலகத்தில் எவரையும் பக்க பலமாக வைத்துக்கொண்டு நாம் வாழ்வது நடக்காத வேலை. எல்லா வேலைகளுக்குமே,பிறர் என்ன கூறுவார்களோ என நாம் தயங்கி, தயங்கி நின்றோமானால் நம்மால் நம் மனதுக்கேற்ற மகிழ்ச்சியை காணவே மாட்டோம்.ஆனால் சத்தியத்திற்கு மாறாக நடக்க மாட்டேன் என பிரமாணம் எடுத்துக்கொண்டும் வாழவேண்டும்.
Leave A Comment