ஞானம் தேவையா,விஞ்ஞானம் தேவையா? ஞானமும்,விஞ்ஞானமும் என கேட்கும்போது எது மகத்துவத்தில் பெருமையாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது, என கேட்கவும் தோன்றுகிறது.எது எப்படியிருந்தாலும் எதுவுமே அடித்தளத்திலிருந்து மாறப்போவதே கிடையாது. யாவருக்கும் அவரவர்க்கு தேவையானவைகள் சுலபமானவழியில் கிடைத்துக்கொண்டேயிருந்தால் எவருக்கும் பெற்றோர்களோ,இன்றைய தேதியில் பிள்ளைகளோகூட தேவைப்படுவதில்லை.வீடுகளிலும் எத்தனை குறைவான நபர்கள் வாழ்கிறார்களோ, அத்தனை மனப்பூர்வமான வாழ்க்கை வாழாவிடினும், வாழ்ந்தே வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. தேவைகள் அதிகரித்துப்போய் விட்டதும் ஒரு காரணம். ஆனால்,தேவைக்கு அதிகமாக கிடைப்பதும் இன்னொருகாரணம். உற்றார் உறவினர்கள்கூட தள்ளியிருந்தாலே போதுமே என்று நினைக்கிற மனதுகள் வளர்ந்து வருகின்றன.பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பாரமாகிவிட்டார்கள். பிள்ளைகளும், பெற்றோருக்கு பாரமாகிக்கொண்டு வருகின்றனர். கூட்டக்குடும்பங்கள் பிடிக்கவில்லை. வேலைசெய்ய ஆட்களிருந்தால் போதும்.வேலை செய்யமுடியாத நபர்களுக்காகவே ஹோம்கள் உள்ளன.
அந்த நாட்களில் வாயுஅறை ‘காஸ் சேம்பர்’என ஒன்று இருந்தது. அடக்கமுடியாதவர்களையும், உபயோகப்படாதவர்களையும் காஸ் சாம்பரில் கொண்டு தள்ளிவிடுவார்கள். மூச்சுவிட முடியாது திணறி,திணறி செத்து விடுவார்கள். ஆனால் திரும்ப வரவேமுடியாது. விஞ்ஞானம் கண்டுபிடித்தசாதனம் இது. நமக்கு எதுஅவசியம் என்பதை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. நம்மை யார் வைத்துக்கொண்டு திண்டாடுகிறார்களோ அவர்கள் முடிவெடுப்பார்கள்.இது நம் கையில்,இல்லாத்தால் நம்க்கு கவலையில்லை.
ஞானம் என்பது ஓரிரண்டு தேவைகள் கிடைத்தவுடன் கிருஷ்ணா,ராமா, கோவிந்தா என மனதுக்குள் கூவிக்கொண்டு, அதுவும் சத்தமாக கூற வேண்டிய அவசியமில்லை.எந்த டிமாண்ட்டும் இல்லாது, குரலை வெளியில் காட்டாது, சத்தமில்லாது கிடைத்தவைகளைஉண்டு கொண்டு, நாம் யாருடன் வாழ தீர்மானித்திருக்குமோஅவர்கள் சிரிக்கும்போது நம்க்கு சிரிக்க தோன்றாவிட்டாலும் கட, கடவென்று ஒரு அசட்டுசிரிப்பை குறைந்த சமயத்திற்கு சிரித்து விட்டு நகர்ந்து விடவேண்டும். இப்படி வாழ்ந்துவருவதுதான் இக,பர,சுகத்திற்கு ஏற்றவைகள் என்பதை புரிந்து கொண்டு, ஏற்றுக்கொண்டும் காலத்தை கடத்தலாம்.
பிள்ளைகளுக்கும் அதே ஆட்களை பார்த்து,பழகி மனம் அலுத்து விடுகிறது, எப்படி எக்ஸேன்ஞ்சில் பழைய சாமான்களை கொடுத்து புதிய சாமான்கள் வாங்குவது போல்தான் இதுவும்.புது உறவைகண்டு விட்டதும், பழைய உறவுகளைக் கண்டால் கண்ணில் உறுத்துகின்றது. இக,பர வாழ்க்கையை மறந்து வாழ ஒரு தனி தன்மை மனதில் வந்து அதை கடைபிடிக்கும் மனமும் வந்து விடவேண்டும்.
Leave A Comment