ஒருசிலர் பொய்க்கதைகளை கூறினால், நாம் வியந்து கேட்டுக்கொண்டிருப்போம்.நாம் உண்மையாகவே கூறினாலும் சிலர் பொய் என்றே எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.ஆனால் பொய் என்பதை திரித்து உண்மைக்கதைபோல ஜோடித்து பேசினாலும் பலரும் மூக்கில் விரல் வைத்துக்கொண்டு வியப்பார்கள்.உண்மையில் சில விவரங்களை காதில் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாலும்,மண்டைக்குள் ஏற்றுவது கடினம்தான். ஆனாலும் யாவருக்கும், உண்மையே பேசவேண்டும் என்கிற நல்லநோக்கமிருந்தாலும் சிறியவயதில் பெற்றவர்கள், கூடபிறந்தவர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் சிநேகித கும்பல்கள் யாவரும் ஆபத்தில் பொய்கூறுவது பாவமில்லையென ஆண்டவன் கூறியதை கடைபிடித்து வருவதாக கூறிவிடுவார்கள்.
ஆபத்தில் பொய்பேசுவது பாவமாகாது என பெரியவர்கள் கூறி சிறியவர்கள் கேட்டுவிட்டால் அதே பழக்கமாகிவிடுகிறது. மனித குலமே பழக்கங்களுக்கு அடிமையாகித்தான் எதையுமே சாதிக்கப்பார்க்கிறது.எத்தனை காலங்களாக இந்த பழக்கம் நீடித்து வருகிறதோ தெரியவில்லை.ஒரு சிலர் வேடிக்கைகள் காட்டும்போது கட்டுக்கதைகள், அதாவது பொய் கூறுவார்கள். ஒரு உண்மைக்கதையின் உண்மை தெரியாவிட்டாலும் புளுகுவார்கள், அவர்களின் உண்மைக்கதையை தெரிந்து கொண்டாற்போல்.சில குடும்பங்களில், ஆட்கள் வைத்திருப்பார்கள், நிலபுலன்களை கண்காணிக்க, அந்த ஆட்கள் கதை விடுவது சகஜமே. வேலைக்கார்ர்களை விட்டு சாமான்களை வாங்கிவரசொன்னால், அதிலும் கட்டுக்கதைகள் ஜோடிப்பார்கள். ஆபத்திற்கு பொய்கூறுவதில் பாவமில்லையென ஞானம் உதித்தாற்போல் பேசுவார்கள். நம்க்கு ஏற்றாற்போல் தானும் வசித்து வருவதாகவும் புளுகுவார்கள். எல்லா பழக்கமுமே பழக்கத்தில் வந்து விடுவதுபோல் பொய்கூறுவதும் பழக்கத்தில், பிரமாதமாக வந்துவிடும். பிறகு நாம் உண்மையையே நம்பாமல் பொய்களையே சத்தியமாக நினைத்து நம்பவும் ஆரம்பித்து விடுவோம்.
உண்மையை விட பொய்க்கு சக்தி அதிகமாக உள்ளது போன்ற பிரமைகளையும் பொய்ப்பேச்சு ஏற்படுத்திவிடுகிறது. எதையுமே ஒருமுறைக்கு, பத்து முறையாக நம் காதுகள் கேட்டுவிட்டால் மனதில் நன்கு படிந்து விடுகிறது. அப்போது பொய் என்பது உண்மை போலவே தெரிய ஆரம்பித்து விடுகிறது.வேறென்ன வேண்டும் மனிதர்களுக்கு.
Leave A Comment