பிள்ளைகளை தூக்கியெடுத்து வேலை செய்வதை விட பிச்சையெடுத்து பிழைப்பது நல்லவேலை என கூறிக்கேட்டிருக்கிறேன். ஆனால் எந்த வேலையையுமே ஆவலுடனும், கடமையை நிறைவேற்றவும் சரிவர செய்தேயாகவேண்டும். ஒருசிலருக்கு சிறிய பிள்ளைகள்தானே என நினைத்து, சிறிய பிள்ளைகள் செய்துவரும் வேலையில் குற்றம், குறைகளைக்கூறிக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் பெரியவர்கள் தவறாகவே எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன கியாரண்டி உள்ளது? ஆகையால் நாம் எப்போதுமே சிறியவர்களிடம் குற்றம் குறைகள் கண்டு பிடித்துக்கொண்டேயிருந்தாலும் சிறியவர்களுக்கும் மனது உடைந்து போய்விடும் என்பதில் சந்தேகமேயில்லை. நான்கு முறைகள் கேட்டுக்கொண்டிருப்பார்கள், ஐந்தாவது முறை கொஞ்சம் முறைத்துக்கொள்வார்கள். அடுத்தடுத்து கடுப்பை காண்பித்துக்கொண்டேயிருந்தால், எகிறி குதித்து முகத்திலடித்தாற் போல பேசுவதற்கு சான்ஸ் நாமே கொடுத்து விடுகிறோம், என்பதை மறந்து பேசிவிடுவார்கள்.
குற்றம் கூறுவது என்பது ஒரு பழக்க தோஷம்தான். தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமுள்ளவர்கள் மட்டுமே சதா ஏதாவது தவறுகளையே சுட்டிக்காண்பித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சம் சுமாரான குணமுள்ளவர்கள், அதாவது பட,படவென்று பேசாதிருப்பவர்களை கண்டால்,அதிக வேலை செய்யாதிருந்தால், அதிக வேலை செய்து பழக்கமில்லாதவர்களை கண்டு எதை வேண்டுமானாலும் கூறி குற்றம் குறைகளைக்கூறி மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுவார்கள்.ஆகையால் எல்லாவித குணங்களும், எப்போது உபயோகப்படும் என்று நமக்குத்தெரியாது. ஆனால் வித,விதமான மனிதர்களுடன் பேசி பழகும்போதுதான் தெரியவரும், இப்படிக்கூட மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்க வைக்கும்.இன்றைய நாட்களில் சின்னஞ்சிறிய வட்டத்துக்குள் வளைய வரும் பிள்ளைகள், உடனுக்குடன் உணர்ச்சி வசப்பட்டு பதில் பேசாரம்பித்து விடுவார்கள். கேட்பவர்களுக்குதோன்றலாம், வாயேதிறக்கமாட்டான் என நினைத்து வளர்ந்த பிள்ளை இவன் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனால் எத்தனை வயதுவரை சிறியபிள்ளை சிறியவனாகவேயிருப்பான் என்றும் தோன்றவைத்துவிடுவார்கள். இந்நாளைய பிள்ளகளுக்கு மரியாதையை காண்பித்துப்பேசினால், அவர்களும் நம்மிடம் மரியாதையாக இருப்பார்கள்,என்பதை நம்மில் பலர் நினைத்துப்பார்ப்பதில்லை. பிள்ளைகளும் என்றைக்குமே பிள்ளையாகவே இருப்பதில்லை, அவர்களும் வளர்ந்து விடுகிறார்கள், மனமும் வேறுமாதிரியான நினைக்கும் என்பதை பெரியவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.
Leave A Comment