காலத்தின் அலங்கோலத்தை என்னவென்று கூறுவதென்றே புரிவதில்லை. அபிராமிக்கும்,அஸ்வினுக்கும் விவாகம் நடந்து ஆறுமாதங்களுக்குள் தகராறு நடந்து முற்றிப்போய் அவர்கள் கல்யாணத்தையும் ரத்து செய்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது போன்ற தோற்றம் வந்துவிட்டது. அபிராமி தன் மனம் போகும் போக்கில் நடந்து கொண்டிருப்பாள். அஸ்வின் வேண்டுமென்றே வம்பிழுத்து தகராறுகள் செய்வான்.அவளும் அதற்கேற்றாற்போல் சீண்டிவிட்டு கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்க காத்திருப்பாள்.வேண்டுமென்றே அபிராமி, அஸ்வினுக்கு பிடிக்காத விஷயங்களை ஆவலுடன் செய்து காட்டி விட்டு வேடிக்கை பார்ப்பாள்.
அண்ணன் தங்கைகளுக்குமே தகராறு வரும்,ஆனால் ஒரே ரத்தமானதால் பிரிந்துவிடுவது கடினமே.ஆனால் கணவன் மனைவிக்கும் மனதளவில் கசப்பேற்படும் படியான அளவிற்கு வளர்ந்து விட்டால் எந்த முடிவிற்கும் வந்துவிடக்கூடும். ரத்தபந்தங்கள் கொஞ்சம் யோசனை செய்து பிரிவை ஒத்திப்போடப்பார்ப்பார்கள். வாழ்க்கையின் நடுவில் வந்து கலந்து கொண்டவர்களுக்கு, சேர்ந்த குடும்பத்தினருடன் ஆசை அபிலாஷைகள் குறைவாகத்தான் இருக்கும், ரத்தபந்தமில்லையே. தன் சுகத்தையே நினைத்துதான்,வாழ்க்கையை நடத்தப்பார்ப்பார்கள்.
ஒவ்வொருவரும் பிறந்து வளர்ந்த சூழ்நிலையே வேறு. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவிதமான நம்பிக்கை, பழக்கங்கள் உள்ளது.சில வீடுகளில் ஆண் பிள்ளைகளையே தெய்வங்களைப்போல் போற்றுவார்கள். மற்றும் சிலவீடுகளில் வேலைக்கு அமர்த்தியிருப்பவர்களை போல் நடத்துவார்கள். அவரவர் வீட்டுப்பழக்கங்கள் மாறுவதற்குநிறைய டயம் வேண்டும். பண்டிகை நாட்களை ஓரளவிற்கு கொண்டாடினால்தான் வீடுகள் விளக்கு போல் விளங்கும். யாவருக்கும் தின்பதற்கும், உறங்குவதற்கும் நிறைய வேண்டியுள்ளது.ஆனால் அதை எப்படி செய்து கொள்வது என்று புரியவில்லை. யாராவது செய்து கொடுத்தால் நன்றாகவேயிருக்கும். வாழ்க்கையின் நடுவில் வந்தவர்களுக்கு எத்தனை சொல்லிக்கொடுத்தாலும் வராது. அவரவர் வீட்டுப்பழக்கமேதான் நீடிக்கும். ஆகையால்தான் பலவீடுகளில் குடும்பத்திற்கென்றே உழைத்தவர்கள் மறைந்தபின் குடும்பங்கள் சின்னாபின்னமாகி விடுகிறது. யாவரும் வேண்டுவது என்னவென்றால், தன் வீட்டிற்குள் நுழைந்தவர்கள், மன திருப்தியுடன் குடும்பத்தாருடன் ஒத்துப்போய் குடும்பத்தையே முன்வைத்து நினைத்துவாழவேண்டும்.
Leave A Comment