பண்டைய காலத்தில் அசுரன்கள் அவதாரம் எடுத்தார்கள் என கேட்டிருக்கிறோம்.ஆனால் இன்றைக்கும் கூட வீட்டுக்கு வீடு அசுரன்கள் பிறந்துள்ளதாகவே நினைக்கத்தோன்றுகிறது. எண்ணங்களை உசுப்பி விடுவதாக நினைக்கக்கூடாது, அவரவர்கள் பிறந்த நேரப்படி குணத்தை கொடுத்து எப்படி வாழ்வோமோ அப்படித்தான் ஆண்டவன் விதித்து நடத்துகிறான்.இந்த துர்அவதாரமெடுத்தவர்களுக்கு வயது காலத்தில்பிச்சையெடுத்து வாழ ஆண்டவன் அருள் பாலிக்க வேண்டும். கெட்டவர்களை நல்லவர்களாக்கி வாழவைப்பது கடினமான முயற்ச்சியேதான். நம்மில் பலர் துளிக்கூட பிறரைப்பற்றி யோசித்துப்பார்க்காதபடி வாழும்போது மனது ஏமாற்றமடைந்து தொய்ந்து விடுகிறது. ஏனெனில் கெட்ட வேலைகளை செய்வதற்கும் வெட்கமில்லாமல் வாழ்வதற்கும் தயாராக இருக்கவேண்டும். ஆனால் நம்க்கு வந்த ஏமாற்றங்களையும், கடினமான நேரத்தையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளும் நேரம் வந்தாலும், பகிர்ந்து கொண்டே ஆகவேண்டுமென்ற கட்டாயம் கிடையாது.
எவராவது நமக்கு மனதுக்கு பிடித்தாற் போல் இருந்தாலும் அவசியமில்லாமல் நம்மைப்பற்றிய விவரங்களை எவரிடமுமே பகிர்ந்து கொள்ளும் அவசியமில்லை. எவரிடமாவது நம்க்கு வேலை ஆகவேண்டிய அவசியம் ஏற்பட்டால் நம்மைப்பற்றிய பூரா விவரங்களும் அவர்களுக்கு தெரிந்து கொள்வதும் அவசியமே. இதேபோலவேதான் மற்றவர்களும் நம்மிடம் இருக்கவேண்டும். சிலமனிதர்கள் நம்மைபற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு நேரம் காலம் அமையும்போது, பேசுவதற்கு எந்த விஷயமும் கிடைக்காத நேரத்தில் நம்மை பற்றியவைகளை அவிழ்த்து விடுவார்கள். இதுபோன்ற புத்திக்குறைவைவான செயல்களைக்கூட மன்னித்து விடமுடியும்.ஆனால் நம் வீட்டிற்கு வந்துள்ள பெண்மணியின் கற்பை சூறையாட யோசித்தவர்களுக்கு குஷ்டரோகம் வந்து திண்டாடும்படி நாம் யாவரும் ஒருமித்த மனதுடன் பிரார்த்தனை செய்வோம்.சிலர் அயோக்யத்தனமாக நடந்துகொண்டாலும் மனதில் குற்ற மனப்பான்மையை அடையாது, சாமியார்கள் மாதிரி நடிக்கிறார்கள். பலர் தகாத வேலைகளை செய்துவிட்ட பின்னரும்கூட எதுவுமே நடக்காதது நடிக்கிறார்கள்.
விநாசகாலம் வரும்போது மனிதர்களின் புத்தி வேறுபட்டு விடுகிறது எனபெரியவர்கள் கூறிக்கேட்டிருக்கிறேன், உண்மையான வார்த்தைகள்தான்.ஆனால் நடந்ததை மாற்ற எவருக்குமே சக்தி கிடையாது.நடக்காமல் தவிர்க்க முடிந்திருக்கலாம். நோவு நொடியுடன் தவித்து மனது அலை பாய்ந்து மூளை கலங்காமல், செய்த தவறுக்கு விடை காணாமல் தவித்து கண்கள் கலங்கி தவிக்க வேண்டும் .
பிறர் சொத்தை நாம் அடையவேண்டுமென்ற என்ற எண்ணமேற்பட்டாலே கப்பல் கவிழப்போகிறது என்பதுதான் அர்த்தம்.வீட்டிலேயே அசுர மனிதர்களை வைத்துக்கொண்டு காலம்தள்ளுவேண்டுமென்பது காலில் பாறாங்கல்லை கட்டிக்கொண்டு ஓடுவதற்கு சமானம்தான்.இந்தமாதிரியான கெட்ட எண்ணங்களைக்கொண்டவர்களை நாம் அடைந்து விட்டோமானால் வாழும் வீடே நரகம்தான், வீடும் நசித்து தெருவில் நிற்கும் நேரமும் வெகுஅருகாமையில்தான் உள்ளது என்றுதான் பெரியவர்கள் கூறுவார்கள்.. நன்னடத்தை என்பது ஆண்,பெண் இருவருக்குமே இருக்கவேண்டிய ஒரு அபூர்வமான சொத்து. அதை பற்றி கூறிக்கேட்டு, பிறர் சொல்லிக்கொடுத்து வரும் குணமும் கிடையாது. மனிதர்கள் பிறக்கும்போதே கிடைக்கும்ஒரேசொத்து சற்குணம், காலம் மாற, மாற சற்குணம், துர்குணமாகி சந்தியில் நிற்கும் காலம் வந்துள்ளது இன்றைக்கு.
Leave A Comment