மனித வாழ்க்கையில் எத்தனை மேடு பள்ளங்களை பார்த்துவிட்ட போதிலும்,எல்லோராலும் வாழ்க்கையை சரியான வழியில் நடத்தவேமுடியாமல் போய்விடுகிறது. நாம் ஒருவழியில் நடக்கப்போனால் நமக்கென பல வழிகள் தென்பட்டாலும் நம்மால் பின்பற்ற முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள்உள்ளன. மனது அலை பாய்கிறது. நம்மிடம் அட்ரஸ் இல்லாமல், ஒரு டவுனில் போய் எவரையாவது சந்திக்க வேண்டுமென்றால் சாத்தியமா? நடக்கக்கூடிய காரியமாகுமா? ஒரு சாதாரணமனிதனை ஒருடவுனில் விலாசம் தெரியாது சந்திக்க முயன்றால், முடியுமா? நமக்கு என்ன தேவைகள் என்பதே தெரியாமல் இருக்கும் நேரத்தில் யாராவது நமக்கு எதைக்கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டுவிடுவோம். நமக்கு வேண்டுமென்பதை தெரிந்து கொண்டு எதைக்கொடுத்தாலும் நாம் ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இருப்போம். எது நம்க்கு தேவைகள் என தெரியாத நிலைமையில் எங்கு,எப்படி நிற்கிறோம் என்பதே புரியாமல் நின்று தவிப்போம்.

ஒருசிலர் அவர்களுக்கு தேவையற்றவைகளை கொடுத்தாலுமே ஏதோ கிடைத்துள்ளதே என வைத்துக்கொள்ள நினைப்பார்கள். ஆனால் வீட்டின் சூழ்நிலை காரணமாக வைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டால் சரி,மனம் அதையே நினைக்கிறது. வேறெதையுமே தேடவில்லை,தேடினாலும் கிடைக்காது எனதெரிந்ததும் தேடாமலேயும் இருக்கிறோம். இது என்ன வாழ்க்கை என அலுத்துக்கொள்கிறோம். ஆனால் அதை விட்டு விலகவும் முடியவில்லை,சேர்ந்து இருக்கவும் முடியவில்லை. பணமிருப்பவர்களுக்கு பிரச்னைகளே இருக்காது என நாம் நினைக்கிறோம். உண்மையில் பார்க்கபோனால் ஏழைகளை விட பணம்படைத்தவர்களுக்குத்தான் பிரச்னைகள் அதிகமாகவேயிருக்கும். மேலும் அவர்கள் பிரச்னைகளை சமாளிக்கத்தெரியாமலும் திண்டாடுவார்கள் என்பதே உண்மையும் ஆகும். ஆனால் சாமான்யமான மனிதர்களுக்கு,எதையும் தாங்கும் இதயம் இருக்கும்.கடினமான நேரங்களைக்கண்டு அனுபவித்து பழக்கமாகியிருக்கும் பரதேசிகளுக்கு எதைகண்டும், கேட்டும் பயமேதெரியாது.ஆனால் பணம் உள்ளவர்களுக்கு பணமேதான் தைர்யம் கொடுக்கும்.மேலும் ஊரார் என்ன பேசுவார்களோ என சங்கோசத்துடனும், பயத்துடனும் வாழ்ந்து வருவார்கள். பணம் நம்மை விட்டுப்போய்விடுமோ என்ற பயம் ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மக்களை எப்படி சமாளிப்போம் என்ற கவலை இன்னொரு பக்கம். மிக நல்ல வாழ்க்கை நடத்துகிறோம் என்ற எண்ணத்துடனேயே வாழ்பவர்களுக்கு எதைக்கொடுத்தாலும், அவசியத்திற்கு தகுந்தாற்போல் சமாளித்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துவார்கள்.

அவரவர்க்கு எது தனக்கு ஒத்துவரும் என்பதை தெரிந்து கொண்டு, தனக்கேற்றாற்போல் மாற்றியமைத்துக்கொண்டு வாழக்கற்றுக்கொண்டால் நன்றாகவே முடியும் என்பதற்கு கியாரண்டி எவர் கொடுப்பார்கள்? வாழ்க்கை அமைவது என்பது நம் கையில் இல்லை. நம்க்கு கிடைத்துள்ள வாழ்க்கையை கவனமாக காப்பாற்றி வளர்த்துக்கொண்டு, வீட்டுமனிதர்களையும் அன்புடனும், ஆதரவுடனும் கவனித்து வாழ்வதில்தான் மகிழ்ச்சிகிடைக்குமென்பதில் சந்தேகமேயில்லை. நீச்சல்தெரியாதவர்கள் தவறிப்போய் நீரில் விழுந்துவிட்டால் உயிர் தப்பிக்கவே பார்ப்பதுபோல் மனிதர்களும் தனக்கு கிடைத்த வாழ்க்கையை குடும்பத்திற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு மற்றவர்களையும் செம்மையாக நடத்தி வாழவேண்டும்.கிடைக்காதவற்றை நினைத்து கவலைப்படாமல், கிடைத்துள்ளவைகளை கவனித்து வைத்துக்கொண்டு வாழக்கற்றுக்கொள்ளவேண்டும்.