இந்த அவசரகுடுக்கைகள், என்ற பெயர் எவர் எவருக்கு அளித்திருப்பார்கள் எனதெரிவதில்லை, புரிவதுமில்லை. ஆனால் அவர்களுக்கு எதுவுமே தெரியாமல் புரியாமல் ஏதாவது கூறலாமா, வேண்டாமா என யோசித்து செய்யக்கூட தோன்றாது போய்விடுகிறது. அவசரகுடுக்கைகள் என்றால், முன்பில் யோசிக்காமல், நினைத்துப்பார்க்காமல், நினைத்தவுடன் எதையாவதுசெய்து முடித்துக்காட்டவேண்டிய அவசியமேற்பட்டு விடுகிறது, போல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் வேறு ஏதாவது படிப்போ, வேலையோ, எதுஇருந்தாலும் எதிலும் மனம் போவதில்லை. ஏனென்றால் மனம் பூராவும் கலங்கிகிடக்கிறது. தனக்கென இல்லையென்றாலும் பரவாயில்லை, தன்னுடைய பிந்திய தலைமுறைக்கு எதுவுமில்லாது போய்விட்டால் என்ன செய்வது என்றகவலைதான், அவர்களை பெற்றவர்களுக்கு.அவசர குடுக்கைகளை நிதானமானவர்கள் கண்டால், அவர்களுடைய இருதயம்,படவென்று அடித்துக்கொள்ளும், வாய் பேச்சு தடுமாறும், வாயில் வார்த்தை வராது, வார்த்தைகள் குழறும், இப்படி பலவிதமான சங்கடங்களுக்கு ஆளாவார்கள் என்பது நிச்சயம் .மேலும் தனக்குத்தானே பேசி சமாதானம் செய்து கொள்வது போல் நடந்தும் கொள்வார்கள்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு குறிப்பிட்ட டயத்திற்கு போகவேண்டுமென்றால், முன்ஜாக்கிரதையாக சுமார் இரண்டு மணிநேரம் முன்பாகவே ஸ்டேஷனில் போய் சேர்ந்து நின்று கொண்டு நெருப்பின் மேல் நிற்பது போல் தவிப்பார்கள். பொறுமையை மிகவும் கடைபிடித்தாலும் எதிலும் முந்திக்கொண்டு நின்று விடவேண்டும் பார்ப்பார்கள். ரயிலிலிருந்து நாம் இறங்குமிடத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமணிநேரம் முன்பாகவே தவிக்க ஆரம்பித்து விடுவார்கள்.  தன் கூட பிரயாணம் செய்பவர்களை, ஆடு மாடுகளைப்போல பாவித்து ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள். நம்முடன் பிரயாணம் செய்துவந்த பிரயாணிகளை லட்சியமே செய்யாது தான் முந்திக்கொண்டு இறங்கியோடப்போவது போல தவிப்பார்கள். ரயில் அவர்களை இழுத்துக்கொண்டு ஓடப்போவதாக பாவித்து நடிப்பார்கள்.