நம் மனது தவிக்கும் நேரங்களில், நமக்கு நம்முடைய ஏமாற்றங்களும்,மனதின் கடினமான நேரங்களும் நமக்கு மட்டுமே கிடைத்துள்ளது என நினைத்து, நினைத்து மனமுடைந்து விடுகிறோம். ஆனால் நாம் நமக்கென்று அனுபவிக்கும் நேரத்தில் மட்டுமே அவ்வாறு தோன்றும். நாம் நினைத்தது கொஞ்சம் முன், பின் ஆகி கிடைத்து விட்டால் குடும்பம் பூராவும் என்னை தூற்றினார்கள். ஆனால் நான் மாத்திரம் நம்பிக்கையை இழக்காமல் காத்திருந்து வெற்றி அடைந்துவிட்டேன், என பெருமையாக கூறிக்கொள்வார்கள். ஒரு வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டோமானால்,இனி வரப்போவதெல்லாம்,வெற்றி நமதே என்று நினைத்து காலத்தை கடத்த ஆரம்பித்து விடுவோம்.

ஆனால், ஒரு சிலருக்கு அவர்கள் செய்வதே தெரியாது, ஆனால் பிறரை பற்றியே வாய்கிழிய பேசுவார்கள், ஆனால் வேலையில் காண்பிக்கவே மாட்டார்கள், அதாவது அவர்களுக்கு எதையுமே முடிக்கத்தெரியாது. எந்த வேலையையுமே ஆரம்பித்துவிடுவது சுலபமானதே, ஆனால் அவர்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பை முடிக்கவேண்டிய நேரத்திற்குள், முடித்துவிடவேண்டுமென்ற எண்ணமிருந்தாலும், முடிக்கத்தெரியாது தவிப்பார்கள்,பிறரையும் தவிக்கவைத்து வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் பேச்சு மட்டும் புயல் வேகத்தில் பறந்து கொண்டு வரும்,வந்தவேகத்தில், கலைந்தும் விடும்,என்பதை கேட்பவர்கள் மற்க்கவேகூடாது.

ஆனால் அவர்கள் எதற்குமே அக்கறையில்லாமல், செய்ய வேண்டியவைகளை முடித்து விடாமல், அடுத்த ப்ராஜெக்டை தேர்ந்தெடுக்க திட்டமிட ஆரம்பித்து விடுவார்கள். இந்த மாதிரியான ஆட்களால் அவர்களுடைய பிஸினஸிலோ,வேலையிலோ எதையுமே வெற்றிகரமாக முடிப்பார்கள் என யோசித்துப்பார்க்கவும் முடியாது எவராலுமே, என்பது உண்மையே. உத்யோகத்தில், தன் சொந்தவேலையில் பொறுப்பெடுத்துக்கொண்டு செய்யும்போதுதான் கவனக்குறைவுகளும் ஏற்பட வாய்ப்புகள் ஏராளம், ஆனால் எடுத்தவேலையை முடிக்கமுடியாதபடி திண்டாடிக்கொண்டு இருப்பவர்களை நம்பி பொறுப்பை யார் கொடுப்பார்கள்? இப்படி நம்முடைய திறமையைப்பற்றி நமக்குத்தெரியாமல், நமக்காக பிறர் விளக்கம் கொடுக்கவேண்டியிருந்தால் அதைப்போல ஒரு துர்பாக்கியம் வேறெதுவுமில்லை. இப்படிப்பட்ட ஆட்களுக்கு அவர்களை சுண்டிவிட்டு உணர்வுகளை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்தாலும்,தன்தவறுகளை உணர்ந்து திருந்தி வருவார்களா என்பதும் சந்தேகத்திற்குரிய கேள்வியேதான்.தன்னுடைய திறமைகள் நமக்கே தெரியாமலிருந்தாலும் பிரச்னைகள் அதிகரிக்கும்.

சந்தேகமேயில்லாமல், இந்த பரந்த உலகில் எத்தனையோ குடும்பங்கள் வித,விதமான பிரச்னைகளை எதிர்கொண்டு நிற்கிறார்கள், மனிதர்களின் அற்ப மகிழ்ச்சிகள், மற்றும் பணப்பற்றாக்குறைகள் உள்ளன. எல்லாவற்றையுமே தள்ளிக்கொண்டு வாழவேண்டும். ஆனால் பணபற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாதபடி இருந்தாலும், நாம் இழுத்துப்பிடித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியும்.ஆனால் உயிர் சேதம் என்பது மட்டும் மனிதமனத்தை உடைத்து விட்டு வேடிக்கைபார்க்கிறது. அந்த மனதானது எதை கண்களால் பார்த்தாலும், மனதில் ஒட்டவிடுவதில்லை. மனம் காலியாகிவிட்டதால் திரும்ப,திரும்ப இருந்து இழந்ததையே நினைத்து மாய்ந்து போகிறது.