எப்பேர்ப்பட்ட மனிதர்களானாலும்,மனிதர்கள் மற்றமனிதர்களுடன் மனித தன்மையுடன் பழகாவிடில், மனிதபிறவியெடுத்ததின் பயனேயில்லாது போய்விடுகிறது. ஆனால் புரிந்து கொள்பவர்கள் குறைவு,குற்றம்கூறுபவர்களே அதிகமாக காணப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் மனப்போக்குப்படி எதுவும் நடக்காவிடில், பிறரை குற்றம் கூற தயாராகிவிடுகிறார்கள். அவரவர் மனம் கூறியபடி நடந்துவிட்டால் அவர்கள் பலசாலியாகவும், உலகத்தையே எதிர்க்கும் அளவுக்கு அவர்களுக்கு சக்திஉள்ளதாக நினைக்கும்படியாகவும் நடப்பார்கள். ஆனால் எவருக்குள்ளும் இல்லாத ஒரு குணத்தையோ அல்லது மற்ற குணங்களையோ எதையுமே அவர்களை படைத்த ஆண்டவனால் கூட நடத்திக்காட்ட முடியாது, என்பதே உண்மை.ஒரே குடும்பத்தில் பிறந்திருக்கும் அண்ணன் தம்பிகளுக்கும்,அக்கா தங்கைகளுக்கும், அடைந்திருக்கும் குணங்களிலுமே ஏகப்பட்ட வித்யாசம் காணலாம். நம்பெரியோர்கள் இம்மாதிரியான வித்யாசங்களை எடுத்துக்காட்டவே தாயும், சேயுமானாலும், வாயும் வயிறும் வேறுதானே எனக்கூறிக்கேட்டிருக்கிறேன். அதுவும் உண்மைதான்.

தாய் நினைப்பது போலவே அவள் பெற்ற பிள்ளைகளும் நினைத்துப்பார்ப்பார்கள் என எவராலும் யோசிக்கமுடியாது. ஏனென்றால் தாயும் சேயுமானாலும் அவரவர்க்குள்ள குணாதியசங்களும், வேறுபட்டும், மாறுபட்டும் விடும் என்பது உண்மையே. நாம் பெற்ற செல்வங்கள் கூட ஒவ்வொருவரும் வித,விதமான குணங்களையே கொண்டுள்ளார்கள். நமக்கு ஒரு சிலருக்கு உதவிகளை செய்யவேண்டும் என தோன்றும் செய்தும் விடுவோம். ஆனால் தேவைக்கு அதிகமாக எவருக்குமே உதவிக்கரங்களை நீட்ட வேண்டிய அவசியமில்லை. நாம் கொஞ்சம் அதிகமாக காண்பித்தாலும் ஒரு சிலருக்கு நம்முடைய உதவிகள் மிகவும் தேவை, ஆனாலும் ஜம்பமான மனது கேட்ககூடாது என கூறுமாதலால், நம்மை கேட்காது அதை எப்படியாவது அவர்கள் சாதித்து காட்டிவிட வேண்டியதற்காகவே செய்தும் விட்டு நம்மிடம் சொல்லியும் காட்டுவார்கள்.

அதுவும் பணம் படுத்தும் பாடு மனிதர்களை தலைகீழாக செய்துவிட செய்கிறது. பணம் என்பது ஒரு பேய்மாதிரி, அது நல்ல மனதைக்கூட எந்தபக்கம் வேண்டுமானாலும் பறக்கவைத்துவிடும். மனது எல்லாமனிதர்களுக்கும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை, என்பதே உண்மை.