பெண்ணின் விவாகமாகவில்லை,மனம் கடன்பட்டோர் நெஞ்சம்போல் துடித்தது.
கிரிக்கெட்டில் தோற்றேன், மனம் கடன் பட்டோர் நெஞ்சம் போல் துடித்தது.
பிள்ளை படித்து முன்னுக்கு வந்து என்னைக்காப்பாற்றுவான் என நினைத்தேன்.
நடக்கவில்லை, மனம்கடன்பட்டார் நெஞ்சம் போல் துடித்தது. வருமானமேயில்லையே.
தனக்கென வீடுவாங்க நினைத்தேன், முடியவில்லை, மனம்கடன் பட்டோர் நெஞ்சம்போல் துடித்தது.
விமானத்திலேறி ஆகாயத்தில் பறக்கநினைத்தேன், முடியவில்லை, மனம் கடன்பட்டார் நெஞ்சம் போல் துடித்தது.
கடனில்லாமல் வீடு வாங்க நினைத்தேன், முடியவில்லை கடனுக்குமேல் கடன் வாங்கி வீட்டை வாங்கிவிட்டேன்.
உண்மையிலேயே கடனைவாங்கிவிட்டு துளிக்கூட தவிப்பேயில்லாது இருக்கிறேன். எவரோ கொடுத்திருக்கிறார்,
நமக்கென்ன, வீடு என்னுடையது எனகவலையற்று வாழ்கிறேன்.