நம் வாழ்நாட்களில் நமக்கே தெரியாது எது எப்போது நடக்குமென்பது எவருக்குமே தெரியாது. ஆனால் தெரிந்துகொண்டு, உணர்ந்து கொண்டு, வாழ்க்கையின் உபயோகத்தில் கொண்டு வரமுடியுமானால் நலம் பயக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஒருசிலர் நம்மைப்பற்றிய பூரா விவரங்களை தெரிந்து கொண்டு அலட்சியப்படுத்த பார்ப்பார்கள். ஆனால் நேரத்தை கண்டவர்கள் யார்? ஆனால் இந்த நடவடிக்கை அவர்களின் கள்ளத்தனமான எண்ணங்களையே பிரதிபலிக்கிறது. இந்த வாழ்நாட்களின் இன்றையகாலமும், கடந்தகாலமுமே நமக்கு தெரிகிறது. எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியாது. நிறைய நேரங்களில் உருண்டு புரண்டு முன்னேற பார்த்தவர்களும்கூட தோற்றுப்போய் உதவாக்கரைகளாக மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து உட்கார்ந்து போயிருப்பதையும் கண்டிருக்கிறேன். அனாதையாக வளர்ந்தவர்கள் அமைதியான வாழ்க்கையை நடத்தி அபூர்வமான நேரங்களை தேர்ந்தெடுத்து உன்னதமாக உயர்ந்து வளர்ந்து வந்ததையும் பார்த்திருக்கிறோம்.
ஆகையால் வாழ்க்கை என்பது நாம் நடத்துவதில்லை. அவரவர் விதிப்படியும் கிடைத்துள்ளவற்றை மனதார ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை பகிர்ந்து கொண்டு வாழவும் தெரியவேண்டும். ஆண்டவன் எவருக்கு என்ன விதித்துள்ளாரோ அதுவேதான் கிடைக்கும். வாழ்க்கை என்பதை நம்மால் உயர்த்தவோ,தாழ்த்தவோ முடியாது. நாம் யாவருமே ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் என்னும் பழமொழிக்கு ஏற்றாற்போல் ஆகி விடும். வாழ்க்கையின் வெறுமைகளைக்கண்டவர்களுக்கு, எதிலும் பிடிப்பு இல்லாமல் போய்விடுகிறது. காலத்தின் கோலம் எப்பேர்ப்பட்ட அலங்கோலங்களாக மாறுவதற்கும் சான்ஸ் உள்ளது. மனிதர்களாக பிறந்துள்ள நாம் எந்தவிதமான நேரங்களையும் எதிர்கொள்ள தயாராகவும் இருக்கவேண்டும். பலருடன் பகிர்ந்து கொண்டு வாழவும் தயாராக இருக்கவேண்டும். மனிதர்களுக்கே உரித்தான குணக்கேடுகளை அடைந்து விட்டாலும் மற்றவர்கள் போல் வாழவும் கற்றுக்கொள்ளவேண்டும். எதுவுமே சீராக அமையாவிடில் வாழ்ந்தால் என்ன, வீழ்ந்தால் என்ன என்பதுபோல் நினைப்பார்கள், பலர்.ஆனாலும் மனித சமுதாயத்தில் அவரவர்கென்று இடம் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டியது மிகவும் அவசியம்.அந்த ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டு மனித சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த அளவில் உயர்த்தப்பார்க்கவேண்டும்.
Leave A Comment