இப்போதெல்லாம் பெண்பிள்ளைகளை எவரிடமும் நம்பி விட முடியவில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சைத்தான் குடிகொண்டு விட்டாற்போல் உள்ளது. பெற்றோர்களுக்கு மனதில் ஒரு திகில், பயம் கூடிக்கொண்டே போகிறது. எதையுமே ஒரு அளவுக்குமேல், நம்மால் எவரையுமே கண்டரோல் செய்து கண்காணிப்பதும் கடினமான வேலையே. மனிதமனம் மிருக இனமாக மாறிவருகிறது என்றுதான் கூறத்தோன்றுகிறது. காலங்கள் அலங்கோலமாக மாறி வருகிறது போல் காணப்படுகிறது. ஆண்கள் மனதில் சைத்தான்கள் குடிகொண்டுவிட்டாற்போல் ஒரு தோற்றம் தோன்றி வருகிறது. யோக்யமான மனிதர்களையும் சந்தேக கண்களுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். காலத்தின் கோளாறுதான் காரணம் என்பது பேச்சுக்காக கூறப்படுகிறது என்றே நினைக்கிறேன். எவர்கள் பெண்மணிகளை காப்பாற்றவேண்டுமோ அவர்களே நாச வேலைகள் செய்ய ஆரம்பித்தால் இதன் முடிவு என்னவாகுமோ தெரியாது. ஆணுக்கு சரீரபலம் இருப்பது போல பெண்மணிகளுக்கு மனோபலம் அதிகமாக உள்ளது என்பதை நினைவு கூறுங்கள். கோழைகளாகி விடாமல் வாழ்நாட்களை செலவழியுங்கள். விநாசகாலம் நம்மை அண்டவரும்போது மனித புத்திகலங்கி விடுகிறது என்னவோ உண்மையென்றே தோன்றுகிறது. ஆனால் மனிதர்களுக்குசபலம் அதிகரித்து வருகிறது. எதற்குத்தான் சபலம் என்பதற்கு உதாரணம் காட்ட முடியாமல் இருக்கிறது. மனிதபுத்தி வக்கரித்துக்கொண்டு வருகிறது. ஏனெனில் எவருக்கும் தெரியவில்லை தான் என்ன செய்யவேண்டும் என்பதை விட எதை தப்பித்தவறிக்கூட செய்யக்கூடாது என்பதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு செயல்படவேண்டும். தானும் எதையாவது செய்துவிடவேண்டுமென்ற கட்டாயத்தில் உழன்று கொண்டிருப்பதாக நினைத்து சிலர்செயல்படுகிறார்கள். எவரையும் கட்டாயப்படுத்தி எதையுமே செய்து காட்டமுடியாது. ஆனால் பலருக்கும் எதையாவது நடத்திக்காட்டவேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் நடத்திக்காண்பிக்கும் திறமையில்லை. எந்தவேலையானாலும் முழு மனதோடு ஈடுபாட்டுடன் செய்து விட ஆரம்பித்தோமானால் நாம் நம் திறமையை காட்ட வைத்துவிட முடியும் என நம்புவோம். மனிதர்களாகப்பிறந்த நாம் யாவருமே அவரவர் சுவாரஸ்யத்திற்கென உள்ளதை செய்து காட்டமுடியும். நம் பாரதமாதாவை பற்றிய உயர்வான பேச்செல்லாம் வியர்த்தமாகி விட்டது போன்றதொரு தோற்றமும் காணப்படுகிறது.
மனிதர்கள் தங்களுடைய நிலைமையை யோசித்து செயல்படவேண்டியது மிகவும் அவசியம். ஆண்கள் அவரவர்களுடைய கண்ணியத்தை இழந்து கேவலம் ஒரு கீழ்த்தரமான மிருகமாக மாறி வருவது வருந்தத்தக்க சமாசாரம். எத்தனையோ தியாகிகள், ஞானிகள்பிறந்து மறைந்த இந்த பாரத பூமியில், எத்தனையோ புண்ணிய ஆன்மாக்களும், பிறந்து பிறருக்காகவே தங்கள் உயிரை தியாகம் செய்த பூமியின் பலத்தை ஆண்டவன் ஏன்இப்படி சோதனை செய்கிறார், ஏன்? ஆண்களின் மனோபலம் குறைந்து கீழ்த்தரமான நடவடிக்கையில் இறங்கி தன்மானத்தை கூட இழக்க இந்த பாரதபூமியில் தயாராகிவிட்டார்களே? காரணம் மனதில் பலம் குறைந்து வருவதும் கேவலமான செயல்களை நற்செயல்களாக காண்பதும் மட்டுமே காரணமில்லை, தங்கள் சரீர இச்சைகளை பூர்த்தி செய்துகொள்வதில் ஆர்வம் அதிகமாகி தன்மானத்தை இழந்து தவிக்கும் கதி நேர்ந்து விட்டது. ஆண்கள் மனதில் ஆண்மை குறைந்து விட்டதே காரணம்தான் என நினைக்கத்தோன்றுகிறது..ஆங்கிலேயர்களுக்கு மனைவியல்லாதவர்கள் யாவரும் மாதாக்கள் என போதித்த நம்பூமிக்கு இப்படியொரு இழிவான காலம் வந்துவிட்டதை நினைத்தால் குலை நடுங்குகிறது.
Leave A Comment