ஒரு சிலர் எதைப்பற்றி பேசினாலும், உனக்காகவேதான் நான் இருப்பதாக சதா சர்வகாலமும், கூறிக்கொண்டே ஆனால் நமக்காகவே ஒருநாளும் இருக்கவே மாட்டார்கள். நமக்கென எதிலும் பங்கு பெறவும் வரமாட்டார்கள் . ஆனால் அவர்கள் வாய் என்னவோ நமக்கென்றே உயிர் வாழ்வதாகவும் புலம்பிக்கொண்டேயிருக்கும். எவரையும் நாம் உயர்த்த முயன்றாலும் நடக்காத வேலைதான் என நம்மைப்போன்றவர்கள் புரிந்துகொண்டு வாழவேண்டும். ஒரு சில மனிதர்களுக்கு என்ன பேசுகிறோம், அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என புரியாமலே ஏதோ பேசவேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் யாருமே அவர்களை தடுத்தி நிறுத்தமுடியாது என்பது உண்மையான ஒரு சமாசாரம்.
கோயிலில் ஆண்டவனைப்பார்க்கப்போவதற்குகூட நமக்கு கொடுப்பினை இருந்தால்தான் தரிசனம் கிடைக்கும். இல்லையேல் நம்மை போகவிடாமல் தடுப்புகள் வந்து கொண்டேயிருக்கும். எதுவுமே நம் கையில் கிடையாது. ஆண்டவனின் கட்டளைப்படிதான் உலகமே நடந்துகொண்டது வருகிறது என நாம் கண்கூடாக பார்க்கும்போதுதான், அனுபவிக்கும் நேரத்தில்தான் உணர்கிறோம். எந்தவொரு சிறிய ஒரு உயிரைக்கூட நம்மால் உருவாக்கமுடியாது. ‘அவனின்றி அணுவளவும் அசையாது ‘ என்பது நம் வாழ்நாளில் எத்தனையோ சமாசாரங்களில் அடிபட்ட பிறகே உணர்கிறோம். உண்மையை உணர அசாத்தியமான நம்பிக்கைதேவை.
Leave A Comment