காலம் மாறினாலும், உறவுகள் மாறினாலும் அடிப்படையாக இருந்த அன்பும், ஆதரவும் கூட மாறிவிடுகிறது . ஏனெனில் எவருக்கு என்ன தேவைப்படுகிறது  என்பதை சிநேகித கும்பலில் பேசி ஒருவருக்கொருவர் தன்னிடமுள்ளவைகளில், தனக்கு தேவையில்லாதவற்றை  பிறரிடம் கொடுத்து அவர்களிடமிருப்பதில் தேவையற்றது என்றால்  அவர்களிடமிருந்து   நாம்வாங்கி உபயோகித்து கொள்ளலாம். எல்லாமே மனம் ஒத்துப்போய் பரிபூரண திருப்தியுடன் இருந்தால்தான் நடக்கும். இல்லையேல் எலிகளும், பூனைகளும் ஒன்றாக வாழ்ந்து வருவது போல்தான்  ஆகிவிடும். கடு, கடு, வெடு,வெடுவென்று பேசி நல்லகுணத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது. எந்த துர்சுபாவமுமே பழக்கத்தில் வருவதை  தடுத்தி நிறுத்தப்பார்க்கவேண்டும். பேச்சை வளர்த்துவிட்டால் கண்ட்ரோல் செய்வதும் கடினமே. நம் சொந்த பிள்ளைகளிடமுமே அவசியத்திற்கு  அதிகமான பேச்சை  வளர்க்கக்கூடாது. ஒரு அளவிற்குமேல் தன்னைவிட சிறியவர்களிடம்  பேச வேண்டிய அவசியம் இருந்தால் மட்டுமே பேசினால் போதும். பிறரை பற்றிய கிண்டல் பேச்சுக்களை தவிர்ப்பது என்பது மிகவும் அவசியம். பேசுபவர்களுக்கு தெரியும், அந்த வியர்த்தமான பேச்சு டயத்தை போக்க மட்டுமே பேசியது என்று. ஆனால் கேட்பவர்களுக்கு அந்த பேச்சு ஸீரியஸாக தெரியலாம். அதனுடைய எதிரொலி வேறுமாதிரியாகி விடக்கூடும்.   நம்நாவில் நமக்கே ஒரு கண்ட்ரோல் இருக்கவேண்டும்.

‘சும்மா கிடந்த சங்கைஊதிக்கெடுத்தது போல’ என்று ஒரு பழமொழி உண்டு. அதை நிரூபிப்பது போல நாம்எதையாவது தவறாக கூறி நம்மை நாமே இழிவு செய்து கொண்டுவிடக்கூடாது. அதுவும் இருபதாம் நூற்றாண்டு பிள்ளைகள் மகா புத்திசாலிகளாக வளர்ந்து வருகிறார்கள்.   நாம் பலமுறை யோசித்துத்தான், அதிகப்படியாக பேசவேண்டுமானால் பேசலாம். இல்லையேல் வம்பை  விலைகொடுத்து வாங்கியது போலாகி விடக்கூடும். தற்கால பிள்ளைகள் நமக்கு எடுத்துக்கூறுவதிலும், அவர்கள் எடுத்துக்கொள்வதிலும் தேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதில் யாதொரு சந்தேகமுமில்லை. நம்மை விட நிறைய விபரங்களை அவர்கள் கண்டிருக்கிறார்கள், விவரமாக பேசிக்கொள்கிறார்கள். காலம் மாறுவதற்குள் கடை பிடிக்கக்கூடியவைகளை கற்றுக்கொண்டு விடுவதில் தேர்ச்சியடைந்தும் விடுவார்கள். பழைய கால மனிதர்களின்  குற்றங்களையே பற்றி பேசிக்கொண்டிருக்ககூடாது.

இந்த இருபத்தியோராவது நூற்றாண்டில் எத்தனையோ மாறுதல்கள் வந்து விட்ட போதிலும் ஒருசிலர், அதாவது பெரிய வயதானவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள மறுக்கிறார்கள்.  சிறியவர்களோ தங்களுக்கு தெரியாவிட்டாலும் தெரிந்து கொண்டாற்போலவே நடிக்கிறார்கள். மேலும் எவராவது புத்திமதி கூறினாலும் கேட்டுக்கொள்ள மனது இடம் கொடுப்பதில்லை.  இந்த இரு சாராருமே தவறாக நடக்கவில்லை. ஆனாலும் ஒத்துவரவேண்டாமென்பது போன்றதொரு தோற்றம் கிடைக்கிறது.  சிற்சில விபரங்களில் அவரவர்களே முடிவு எடுத்துக்கொள்வதே நலத்தைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய நாட்களில் பிறர் பேச்சைக்கேட்டு முடிவெடுக்கும் சுபாவம் எவருக்குமே இருப்பதாக தெரியவில்லை..காலத்தை ஒட்டியே முடிவுகள் சரியாக எடுக்கத்தெரியவேண்டும்.