எவருக்கும் தெரியாது, நாம் எங்கு, எப்படி முடியப்போகிறோம் என்பதை பற்றி. ஆனால் யாவருக்கும் இந்த ஒரு சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கும். நம்மைப்பற்றி எவருக்குமே தெரியாத சிதம்பர ரகசியம் அது. நம்மை படைத்தவனுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம் அது. உடல்நலம் குன்றி வைத்திய சாலையில் அட்மிட் ஆகி பிழைத்து வீட்டுக்கு வந்துவிட்ட போதிலும், அந்தநேரத்தை மறக்கவேமுடியாது. நமக்காக எங்கு என்ன காத்திருக்கிறது எனவும் தெரிவதில்லை, எதிரில் வரும்வரை. ஆனால் நாம் நினைப்பது என்னவென்றால் நம்மால் எதையுமே செய்துவிடலாமென சவால் விடமுடியுமென நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையாக நமக்கு வேண்டுமென்றால் நாம்தான் முன்னுக்கு வந்து கேட்கவேண்டும். நடப்பதெல்லாம் நம் மனோபலத்திலுமில்லை, சரீர பலத்திலுமில்லை. எவற்றையெல்லாம் நீக்கவேண்டும், காப்பாற்றப்பட வேண்டும் என யோசித்து செயல்பட வேண்டும். ஆனால் உடல் நலம் குன்றி விட்டால் மனக்கலக்கம் ஏற்பட்டு விடுகிறது சகஜமே. ஆனால் எதையும் எதிர்பார்த்து ஏமாற வேண்டிய அவசியமில்லை. ஆண்டவன் மீது பாரத்தை போட்டு காலத்தை ஓட்டப்பழக்கி கொள்ளவேண்டும். நம்மால் செய்ய முடியாதவற்றவைகளை, அவன் தலையில் போட்டுவிட்டால் நடப்பது நடக்கட்டுமென விட வேண்டியதுதான். இல்லையேல் மனகலக்கத்திற்கு அளவிருக்காது. அரை குறை ஞானமும் மிகவும் அபாயகரமானதுதான். எவராலும்,சில குறைகளை நிறைவேற்ற முடியாது.
Leave A Comment