காலத்தின் வேறுபாடுகள் மாறி,மாறிஆகிக்கொண்டுதான் இருக்கும் என்பது நாம் யாவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் சில நடவடிக்கைகளை கண்டுகொள்ளாதும் காலத்தை ஓட்டவேண்டியதாகிறது. ஆண்டவன் தனியாக நமக்கென்று எவரையும் கொடுக்கப்போவதுமில்லை. அவர்களும் நமக்காகவே காத்திருந்து வாழப்போவதுமில்லை. தமக்கென்று அளிக்கக்கூடியவைகளை ஆண்டவன் அருளிவிட்டான். ஒரு இருபது வருடங்கள் முன்பிருந்த காலத்திற்கும் இப்போதிருக்கும் நேரத்திற்கும் வித்யாசம் உள்ளன. யாவரும் நேரம் என்பதை, கிடைக்கும் நேரத்திற்குள் உபயோகித்துக்கொண்டு விடவேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள். முன்பிருந்த மனிதர்களின் சுபாவம் வேறு, இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் எண்ணங்களும் மலைக்கு மடுவிற்குமுள்ள ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.
இன்னம் கூறப்போனால் சம்பந்தமே கூட இல்லாது இருக்கலாம். முற்காலத்தில் சாதிவேறுபாடுகள் இருந்தன. இன்றைய நாட்களில், உடைகளிலிருந்து, சாப்பாடு , பேச்சுவார்த்தைகள், நடை ,உடை, பாவனைகளோட யாவுமே வேறுபட்டு விட்டது. ஆனால் எவருக்கும் வாய் உள்ள இடத்தில்கண்களும் ,கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் மூக்கும் முளைத்துவிட்டால் என்னவாகும் என நினைத்துப்பார்க்கிறேன். மாறுதல்கள் ஏற்படுகின்றன, மனிதர்கள் முதலில் முறைத்தாலும் காலப்போக்கில் ஒத்துக்கொண்டு விட்டார்கள். மனிதமனது எல்லாவித மாற்றங்களையும் முதல் தடவையில் ஒத்துக்கொள்வது கடினமாகத்தான் இருக்கும் நாளடைவில் சரியாகிவிடும். எத்தனையோ பிராமண குடும்பங்களில் கலப்புத்திருமணம் நடக்கும்போது தகராறுகள் நடக்கும். அந்த கல்யாணம் நடந்தேதீரும் என்றுவரும்போது யாவரும் மனிதர்கள்தானே என்று வேதாந்தம் பேச ஆரம்பித்து , இரண்டு வருடங்கள் ஓடியவுடன் , நம்சாதி இல்லையே தவிர அந்த பெண்ணும்சரி, பையனும் சரி அப்படியே டிட்டோ நம்மைமாதிரியேதான் நடந்துகொள்கிறார்கள் என, எந்தவாய் குலம்,கோத்திரம்பற்றிப்பேசியதோ அதே வாய்கள் இந்த மாதிரியில் பேசியும் கேட்போம். ஆகையால் எதை ஆரம்பித்து விட்டாலும் முடிவு தானாகவே வந்துவிடும். ஆகையால் எதையும் ஆரம்பிப்பதுதான் கடினம், தானாகவே வளர்ந்து விடும் .
Leave A Comment