ஆண்டவனின் கோர்ட்டில் உயிரிழப்பு என்பது யாராலுமே தவிர்க்க முடியாத ஒரு சட்டம் என்பதை நாம் யாவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய ஒன்று. அதுவும் சமயாசமயமில்லாது உயிரிழப்பு ஏற்பட்டு விட்டால் நமக்கு ஒத்துவருமா, இல்லையா என நம்மை தேர்ந்தெடுத்தா ஆண்டவன் நமக்கு  கடினமானநேரத்தை அருளுகிறான்? ஆண்டவருடைய ஹிட் லிஸ்ட்டில் கிரமத்தில் வருபவர்களை கூப்பிட்டுக்கொள்கிறான். அந்த லிஸ்ட்டில் உள்ளவர்கள் நம்முடையவர்களாகி விட்டால் அது அவன் தவறு இல்லையே. ஆண்டவரும், யமதர்மராஜாவும் உட்கார்ந்து  பெயர்களை வரிசை கிரமமாக எழுதி வரும்போது நம்மை வந்து எடுத்து சென்று விடுகிறான். அவரவர் கடமைகளை செய்துதானே ஆகவேண்டும். அப்போதுதான் உலகம்  ஒழுங்காக நியமத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் , என்பது உண்மையாகும். தாறுமாறாக ஓட ஆரம்பித்து விட்டால் பிரளயத்தில்தான் முடிவுறும். எல்லாமே காலாகாலத்தில் நடக்கிறதா என  கவனித்துப்பார்த்தால் மட்டுமே புரிய வரும். ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கெல்லாம் இடமுமில்லை, பதிலும் கிடைக்காது என்பதே உண்மை.