கலாசாரம் என்பது என்னவென்றே பலருக்கும் தெரியவில்லை. ஆகையால்தான் நிறைய மனிதர்கள் பணமிருந்தால் போதுமென்று நினைத்து வாழ்கிறார்கள். எத்தனை படிப்பிருந்தாலும் , உலக வாழ்க்கையுடன் ஒத்துவராவிடில் என்ன பிரயோஜனம்? படிப்பு, கலாசாரம் இரண்டும் இரு துருவங்கள் போல. ஒன்றையொன்று ஆகர்ஷித்து உருவகப்படுத்துதல் என்பது கடினமானது . தேங்காய்க்குள் இளநீரும், புளியங்காய்க்குள் புளிப்பையும் புகுத்தியவர் யார்? மனித சமூகத்திற்கு நாகரீகம் கற்றுக்கொடுத்தவர் எவர்? இயற்கையின் சுபாவத்தை தலைகீழாக கற்றுக்கொள்ள நேரமிருந்தாலும் , எதையும்பழக்கத்தில் கொண்டு வந்து, நடைமுறையில் கடைபிடித்தால்தான் கலாசாரம் வளரும். மனித சமூகம் தனக்கு வேண்டியவைகளையே நாடி ஓடும். ஆனால் நாம் நமக்காகவே சில பழக்கங்களை கடைபிடிக்கவேண்டும்.
ஒவ்வொரு குலத்திற்கும் வெவ்வேறு விதமான ஆசார, அனுஷ்டானங்கள் உண்டு , அவைகளை கடைப்பிடிக்கும் பழக்கத்தை ஒரளவிற்கு நடைமுறையில் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டியது அவரவர் குடும்பத்தின் கடமையாகும். இந்தமாதிரி இளம் பிராயத்திலேயே ஒருவித மனகட்டுப்பாடுகள், பிரார்த்தனைகள் போன்ற பழக்கங்களை கொண்டு வந்து விட்டோமானால், சிறியவயதில் பிள்ளைகள் கற்றுக்கொண்டு நாளடைவில் பழக்கத்தில் கொண்டு வர முயற்ச்சி செய்வார்கள். இன்று நம்மை சுற்றி நிறைய உறவினர்கள் , சிநேகங்கள் இருக்கலாம் , ஆனால் எவர் எப்போது எப்படி பிரிந்து விடுவோம் என்பது நமக்கே தெரியாத புதிர் . பிள்ளைகளுக்கு தங்கள் மனதளவில், கட்டுப்பாடு , நேர்மை, நியதிகளும் அவசியம் தேவையே என்பதையும் மறக்கக்கூடாது. இவைகளை பிள்ளைகளுக்கும் அடிக்கடி சொல்லிக்கொடுத்து நேர்வழிகளையே கடைபிடிக்கவேண்டுமென வலியுறுத்தியும் காட்டவேண்டும். நம் பிள்ளைகளுக்கு நல்வழி காண்பிக்க வேண்டியது நம் கடமையுமாகும்.
Leave A Comment