உலகில் சாதிக்க வேண்டியவைகள் எத்தனையோ இருந்தாலும் , நமக்கு முடிந்தவற்றை சாதித்து காட்ட நமக்கு சான்ஸும் கிடைக்கவேண்டுமென்பதும் உண்மையே . சிலருடைய வெற்றி குடத்தினுள் ஏற்றிய விளக்காக இருக்கிறது. சிலருடைய வெற்றியோ காற்றோடு கலந்து நாடு முழுவதும் பரப்பப்பட்டு விடுகிறது. எதுவாக இருந்தாலும் அவரவர் மனதிற்கு ஏற்றாற்போல் அமைவதென்னவோ கடினம்தான். எதிலும் மனம் உடையாது , கலங்காமல் செயல் படவேண்டியது மிகவும் அவசியம்.
இந்நாட்களில், பள்ளியின் ரிசல்ட் வரும் நாளில், பிள்ளைகளின் மனதை விட பெற்றோர்களின் மனம் பிரமாதமாக தவிக்கிறது. ஏனென்றால் வீட்டுக்கு வீடு ஒருபிள்ளை, இரு பிள்ளைகள் இருப்பதால், எல்லா பாரங்களையும் பெற்றோர்கள் தன்மீது ஏற்றிக்கொண்டு தவிக்கிறார்கள். பிள்ளைகளிடம் எதைப்பற்றியும் சொல்லவே பயப்படுகிறார்கள். இரண்டு ஆண்பிள்ளைகளென்றால் சிறியவன் என்றுமே சிறியவனாகவேதான் இருப்பான். பெரியவன், பெரியவனாகவே பிறந்து விட்டது போல் அவன் தலையில் பொறுப்பை கட்டிவிடலாமென காத்திருப்போம், பெற்றவர்கள் பிள்ளைகளிடம் பேசும்போது பெரிய பையனோ, பெண்ணோ நீ மூத்த பிள்ளையானபடியால், நீதான் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என தம்பியின் பொறுப்பையும் அண்ணனின், அக்காவின் தலையை உருட்டுவதுதான், கட்டி விடுவதுதான் நம் பழக்கம். சிறியவர்களுக்கு நீதான் கற்றுக்கொடுக்கவேண்டும், என்றும் நைச்சியமாக காது குத்தியும் பேசுவார்கள்.மனித வாழ்வில் ஆயுளும், அதிர்ஷ்டமும் இருந்து விட்டால் வேறென்ன வேண்டும்? யோசித்துப்பாருங்கள்…..
Leave A Comment