எந்த வேலையையுமே சரியான நேரத்தில் செய்வதற்கும், கண்டா, கண்ட நேரத்தில் செய்வதற்கும்  நிறைய வித்யாசம் உள்ளது. ஆனால் நிறைய மனிதர்களுக்கு  இது புரிவதில்லை. உங்கள் வேலை முடியவேண்டும், அது என்னுடைய பொறுப்பில் விட்ட பிறகு நீங்கள் எதற்கு கவலை படவேண்டும் என்று கூறி நம் வாயை அடைத்து விடுவார்கள்.  அதற்குள் வேறுயாராவது கேட்டுக்கொண்டிருப்பவர்கள் கமெண்ட்ஸ்  அடிப்பார்கள், எத்தனை  செய்து கொடுத்தாலும் சிலருக்கு திருப்தியேற்படுவது கிடையாது . அவரவர்களே செய்துகொண்டால்தான் தனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்  எனக்கூறி பதிலடி கிடைக்கும்.

எல்லா வீடுகளிலும்  மாற்றி, மாற்றி  ஏதாவது சர்ச்சைகள் நடந்து கொண்டுதானிருக்கும். அதுவும் கூட்டுக்குடும்பத்தில் ஏதாவது பிரச்னைகள் வந்து போய்க்கொண்டு  இருக்கும் என்பதும் உண்மையே. பெரியவர்களுடன் வாழ்ந்து வரும்போது  பிரச்னைகள் வந்தாலும் அவர்கள் எப்படியோ சமாளித்து விடுவார்கள், என்ற  நம்பிக்கையும்  வரும். ஆனாலும் நம்முடனேயே இருந்து வருபவர்களுக்கு நம் சுபாவம் நன்கு தெரிந்தபடியால் மேஜராக எந்தவித தகராறுக்கும் இடமிருக்காது.     நாத்தனார் மதனிகளுக்கு நடுவில் வேறுபாடுகள் வந்தாலும் அப்போதைகப்போதே சரியாகியும் விடும். ஆனால் மனதுக்குள் புகைச்சல் இருந்துகொண்டே இருக்கும்.    பெரியவர்கள் வேறுபாடுகளை மறைத்து வைத்துக்கொண்டு  தங்கள் வீட்டில் அமைதி  நிலவிவருவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கவும்  பாடுபடுவார்கள்.

ஆனால் ஒருசில வீடுகளில் பார்த்திருக்கிறேன். புதிதாக வந்தவர்களை கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கினாற் போல் வைத்திருப்பார்கள். சிலவீடுகளில் மனதிற்கேற்றாற் போல் நடக்காவிடில், வானத்தை கீழே கொண்டு வருவது போல்  சத்தம்  போட்டு    அம்ர்க்களம் செய்து விடுவார்கள்.    பெண்மணிகளுக்கே உரிய  அதிகாரதோரணையை, அதாவது  கண்ட்ரோலை வந்தவர்களிடம் காண்பிப்பது லட்டு, ஹல்வா தின்பது போல அனுபவித்து செயல்படுவார்கள்.  புதிதாக வீட்டிற்கு வந்தவர்களுக்கு வீட்டிலுள்ளோரின் சுபாவத்தை  அறிந்துகொண்டு ஆவலும், அதேநேரம் கொஞ்சம் பயமாகவும் இருக்கும்.

ஒரு நான்கு வருடங்கள் ஓடியபின் புதியவளும் அதே குட்டைதண்ணீரில் ஊறிக்கொண்டிருக்கும் மட்டைகளைப்போல் பழக்கப்பட்டு விடுவாள். எவராவது  ஒரு வம்புபேச்சை ஆரம்பித்தால் ,  புதியவளும் பத்துப்பேச்சு பேசி அங்கிருப்போரின் வாய்களை மூடவைத்து விடுவாள். நற்குணங்கள் வளர, வளர்க்க அப்பியாசம் தேவைப்படும், மொலேர் எனகூக்குரல் கொடுக்கவும், அர்த்தமில்லா பேச்சுக்களை பேசவும்  காதில் கேட்டாலே  துர்குணங்கள் தன்னைத்தானே நம்மிடம் வந்து  அடைந்து விடும்.   எவருக்கும் எந்தவித அப்பியாசம் கொடுக்கவும்  தேவையேயிருக்காது. எவருக்கும் பதிலடி  கொடுக்கவும் தயங்க மாட்டார்கள், அந்த அளவுக்கு தேர்ந்து விடுவார்கள், பிள்ளைகள்.