இன்றைய நாட்களில் குடும்பங்கள் சுருங்கி வருகின்றன. போன தலைமுறையில் வீட்டுக்கு வீடு ஒரு நான்கு பிள்ளைகளாவது இருப்பார்கள். அதற்கும் முன்பு பத்துப்பிள்ளைகள் இருந்தார்கள் . ஆனால் இன்றைக்கோ  பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகிவிட்டது. விஷயம் என்னவென்று யோசித்துப்பார்த்தால், கணவன், மனைவி இருவருமே சம்பாதித்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. மேலும் யாருக்கும் எவரையுமே சார்ந்திருக்கும் சுபாவமும் மாறிவிட்டது . காலத்தின் கோளாறு என்பதைவிட யாவருக்கும் தனக்கும்  சுதந்திரமாக எதையாவது செய்து தானும் பிரபலமடைய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் தன் திறமைகளையும்  காண்பிக்க ஒரு சான்ஸ் என்பதை நழுவ விடக்கூடாது   என்ற எண்ணமும் தூக்கலாக உள்ளது. எவருக்கும்,  இன்னொருவரை சார்ந்திருக்கும் பழக்கம் துளிக்கூட பிடிக்கவில்லை. பெற்றோரை விட்டு ஹாஸ்டலில் தங்கி படித்த பிள்ளைகளுக்கு வீட்டிற்கு வருவதே  பிடிக்கவில்லை. வந்துவிட்டாலும்  வீட்டில் தங்கவும் பிடிப்பதில்லை. வெளியில் இருந்து பழகிவிட்டபடியால், வீட்டிற்குள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்கபிடிப்பதில்லை. ஆனால் இப்போதெல்லாம் எவருக்கும் கட்டுப்பட்டு வாழ்வது என்பது  ஒரு தண்டனை போல் தோன்றுவதால், கட்டுப்பாடு என்பது  தன்னுடைய சுதந்திரத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாக நினைத்து , தன்னுடைய சுதந்திரமே  பறிபோய்விட்டதாகவும் நினைத்து  வருந்துகிறார்கள்.

அதுவுமில்லாது தன்னந்தனியாகவோ, மற்றும் சிநேகிர்களுடன் கவலையற்று,  வீட்டின் பொறுப்பு எதவுமேயில்லாது பழகியபிறகு, வீட்டிற்குள்    இருப்பது என்பது   கூண்டில் வைத்துள்ள கிளிமாதிரி இருக்கப்பிடிப்பதில்லை. மேலும் மனம்போல் சிநேகிதர்களை பார்க்கப்போகலாம், எவராவது  சினிமா, டிராமா என டிக்கட் வாங்கிக்கொண்டு வந்து மோட்டார்சைக்கிளில் அழைத்துப்போய் இரவில் கொண்டு விடும் பொறுப்பையும் எடுத்துக்கொண்டால் எவருக்குத்தான் வீட்டில் கட்டுப்பெட்டியாக கிடக்கப்பிடிக்கும்?     வீட்டில் தங்கியிருந்தால் பெரியவர்களுக்கு இடைஞ்சல், இரவு லேட்டாகிவிட்டால், இன்னம் காணோமே என பத்து நிமிடத்திற்கு ஒருமுறை மொபைலில்  கூப்பிட்டு  கேட்கும் தொந்திரவு  இவற்றை தவிர்க்கலாம். யாவருக்கும் எங்கு போகவேண்டுமென்றாலும், லிப்ட் கிடைத்துவிடும்.யாவருக்கும் சுதந்திர பறவையாக இருக்கவேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

அவரவர்களுக்கு தேவையான சிநேகிதங்கள் ரெடிமேடாகவும் கிடைத்து விடுகிறார்கள்.  எப்படியோ கனெக்‌ஷன் கிடைத்து விடுகிறது, பலருக்கும்.    இவர்கள்தான் உதவும் மனங்களைஅடைந்திருக்கிறார்கள்.