நான் கூறப்போகும் இந்த கதை உண்மையிலிலேயே நடந்தது. பெற்றோருக்குள் ஒத்துவராத படியால் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாழ பிளான் செய்து கொண்டுபிரிந்து விட்டார்கள். பெற்றோர்இல்லாதபடியால், அகல்யா ஆறு, நான்கு வயதில் உள்ள தன் இரு சிறு பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, தன் அண்ணனை சார்ந்திருக்க தன் வீட்டை விட்டு கிளம்பிவிட்டாள். ஒரு வாரம் நன்றாகவேயிருந்தது. பத்து நாட்களில் அண்ணன் வீட்டில் முன்பிருந்த கல, கலப்பு குறைய ஆரம்பித்து, பிள்ளைகளுக்குள் சிநேகபாவம் குறைந்து தங்கள் சுதந்திரம் குறைந்து விட்டது போல் மாமாவின் பிள்ளைகளை வம்பிழுத்து எதற்கெடுத்தாலும் போட்டிக்கு அழைத்து, வம்புக்கு இழுத்து தகராறுகள் கிளப்பி விட்டுக்கொண்டிருப்பார்கள்.
அண்ணன் வீட்டில் எப்போதும் , எதற்கெடுத்தாலும் பிள்ளைகளுக்குள் சிறிய வாத விவாதங்களில் ஆரம்பித்து சண்டையில் முடிந்து எவர் ஜெயித்தார்கள் என்பதை பற்றி, சிநேகிதங்களிடம் சதா பெருமையடித்து போனில் பேசிக்கொண்டிருப்பார்கள். தோற்றுவிட்டவர்களுக்கு மனோவேதனையை அதிகமாக அளிக்க ,காது, மூக்கு வைத்து கதை கட்டுவார்கள். தாங்கள் மாமா வீட்டில் தங்கியிருக்க முடியாது என்று கூறும் நிலைமை வந்து விட்டது. ஆனால் வேறு போக்கிடமும் இல்லாதமையால் பல்லைக்கடித்துக் கொண்டு ஒருமாதம் ஓடியது. அதன்பின் அம்மாவிடம் நாம் நம் வீட்டை விட்டு வெளியேறியது எவ்வளவு பெரிய தவறு என்று பிள்ளைகள் அம்மாவை தாக்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா என்ன செய்யமுடியும்? யாருக்கும் பாடம் கற்பித்து நம் வழிக்கு கொண்டு வர முடியாது என்றும், நிலைமையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியவேண்டும், என்பதை பிள்ளைகளிடம் பேசுவாள். ஆனாலும் வாழ்க்கையில் எதை எப்படி கையாள வேண்டுமென்பது கற்றுக்கொடுத்தா வரும்? சமயத்திற்கு தகுந்தாற்போல் மட்டுமே நடவடிக்கைகள் இருக்கவேண்டும். தன் கணவருடைய உடன்பிறப்புகளுடனேயே ஒத்து வராதது எங்கு, எவரிடம் ஒத்துவரும்?
பெண்மணிகளின் விவாகரத்திற்கு பிறகு அவர்கள் எந்த நிலைமையையும் கையாளத்தெரியாவிடில் , இந்த வகையான பிரச்சனைகளை பெண்கள் எதிர் நோக்கவேண்டியே வந்து விடும் என்பதை, பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு நாகரீகமாக எடுத்துக்கூறி வளர்க்கவேண்டியது மிகவும் அவசியம். காலம் மாறிவிட்டது , ஆனால் மனிதமனங்கள் புராண காலம் போலவேதான் உள்ளது. நாகரீகமாக வாழ்ந்தாலும் , பிறருக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கலாம் என்பதும் சாத்தியமில்லை. மேலும் பெண்மணிகள் போல் ஆண்கள் மாறுவதில்லை. வளரும் பிள்ளைகளிடமும் ஒற்றுமையே உயர்வை கொடுக்கும் என்பதை பற்றி பேசி புத்திமதிகளையும் கூறிக்கொண்டேயிருக்கவேண்டும். முன்பின் யோசியாமல் வீட்டை விட்டு வெளியேறுவது என்பது மிகவும் மடத்தனமான யோசனை.
Leave A Comment