ஒரு சிலர் உண்மையேதான் பேசுவதாக கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பேச்சில் உண்மை குறைவாகவேயிருக்கும். வாய் சவடால் பேச்சுக்கும், வாழ்க்கையின் நடப்பில் காண்பிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது என்பதை பலர் மறந்து விடுகிறார்கள் என்பது உண்மையே. சிலநேரங்களில் அவரவர்களுடைய தவறு அவரவர்க்கு தெரிவதில்லை என்பதும் ஒரு காரணம். சில மனிதர்களுக்கு பிறரைவிட தன்னை குறைவாக மதிப்பிட்டுக்கொண்டு, மற்றவர்களின் மனதை கவர்ந்து கொள்ளவும் தன்னைப்பற்றி பிரமாதமாக பேசிக்கொள்கிறார்கள். இதுவும் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையின் எதிரொலிதான் காரணம். அவர்களுக்கு தன்னைப்பற்றி எவரும் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது என நினைத்து தன்னையும் பெரிய மனிதனாக மதித்து நடத்த வேண்டுமென்ற காரணமே, அவர்கள் தங்களை உயர்வாக காண்பித்துக்கொள்ளும் நோக்கமும் மற்றொரு காரணம். ஆனால் அவர்களுக்கு ஒரு மிக முக்கியமான விஷயத்தை எடுத்துக்கூறி விளக்கவேண்டும். பலர் அவர்களுடைய யோக்யதையை விட உயர்வாக பேசி மண்டையை குழப்பி அவசிமேயில்லாத ஆர்வத்தை கிண்டி, கிளப்பிவிட்டு வேடிக்கை பார்ப்தெற்கென்றே தூண்டி விடுவார்கள். இந்த உலகில் நம்மைப்பற்றி கவலைபடுபவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். நம் ரத்த பந்தங்கள் மட்டுமே நமக்காக தியாகம் செய்யக்கூடும், ஆனால் அதுவும் கூட ஓரளவுக்குத்தான் என்பதை நாமும் புரிந்து கொள்ளவேண்டும். எவருக்கும் இன்னொருவரை பற்றி கவலைபட நேரமில்லை . ஆனால் போலி உண்மை விளம்பிகள் எங்கு வேண்டுமானாலும் காணப்படுவார்கள். நாம் எத்தனை உண்மையாக நடந்து கொண்டாலும் மற்றவர்களின் அங்கீகாரமில்லாது போய்விட்டால் அதற்கும் மதிப்பில்லை. ஆனால் உண்மையாக நடந்துகொள்வதில் தமக்கென்று கிடைக்கின்ற மன திருப்திக்கு வேறெதுவும் நிகரில்லை. இதை வாழ்ந்து, தேர்ந்துதான் உலகிற்கு தெரியப்படுத்த முயற்சிக்கலாம்.
Leave A Comment