சங்கீதம் என்பது ஒரு தெய்வீகமான ஒரு கலை. . சங்கீதத்தினால் , நாம் நம் மனக்கவலைகளை மறக்கடிக்க முடியும். உடல் நலம் குன்றியவர்களுக்குகூட சங்கீத ஞானம் இருந்துவிட்டால் அது ஒரு டானிக் மாதிரி செயல்படும் என்பது உண்மையே. சங்கீதம் தெரிந்தவர்கள் மனது சதா அதையேதான் சுற்றி, சுற்றி வரும். பாடுபவர்களுக்கும், பாட்டை ரசித்து அனுபவிப்பவர்களுக்கும் ஒரு உன்னதமான பொழுது போக்காகவும் இருக்கும். மேலும் சங்கீதம் கவலைகளை, மறக்கவைக்கக்கூடிய மருந்தும் கூட. நாம் வாய் மூலம் பாடுகிறோம்,மனதால் ரசிக்கிறோம். மனது சங்கீதத்தில் ஈடுபடும்போது மனம் லேசாகி விடுகிறது. சங்கீத்தின் மகத்துவமே தனி.மனதை கவலைகளிலிருந்து நகர்த்தி விடும் சக்தி படைத்தது என்பதுதான் எப்படிப்பட்ட கடினமான நேரத்தையும் நமக்குள் பாதிக்க விடாதபடி செய்யக்கூடிய அபூர்வமான மருந்து.
உடல்நலம் முன்பின் இருந்தாலும் சங்கீதம் தெரிந்தவர்களுக்கு மனநலம் நன்றாகவேயிருக்கும். உண்மையான பாடகர்கள் எங்கும், எந்த நேரத்திலும் பாட வேண்டிய நேரம் கிடைத்துவிட்டால் பாட சங்கோஜப்படமாட்டார்கள், சங்கீதத்தில் உள்ள பிரேமையின் காரணமாக. சான்ஸ் கிடைத்தால், சங்கீதத்தில் இருக்கும் பிரேமையால் வந்த சந்தர்ப்பத்தை நழுவ விடமாட்டார்கள். ஆரம்பகால பிள்ளைகள் மட்டுமே யோசிப்பார்கள், சங்கோசப்படுவார்கள். ஆனால் சங்கீத ஞானமுள்ளவர்கள் மகிழ்ச்சியாக பாட சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பாட்டுப்பாட ஆரம்பித்து விடுவார்கள். சங்கீதம் கேட்டு செடி, கொடிகள் கூட செழிப்பாக வளருமென்று கூறுவார்கள். உடல்நலம் குன்றியவர்களுக்கும் பாட்டுக்கள் போட்டு கேட்க வைத்தால் மனம் நன்றாகயிருக்கும் என கூறுவார்கள்.. பாட்டுகச்சேரிக்கு போய் மூன்று , நான்கு மணிநேரம் ஒரேஇடத்தில் உட்கார்ந்து கொண்டு கூட்டமாக கேட்பவர்கள் இன்றும் கூட இருந்து வருகிறார்கள். மேல்நாடுகளிலும் கூட அவர்கள் பாட்டுக்கச்சேரிக்கும் கூட்டம் போய்க்கொண்டு இருக்கிறார்கள். இன்றைய நாட்களில் வீட்டுவீடு டிவி இருக்கிறபடியால் வீட்டிலிருந்து கொண்டேயும் கண்டும், களித்தும் வருகிறோம். சங்கீதம் ஒரு மேன்மையான கலை என்பதில் சந்தேகமில்லை. மனித மனதை உல்லாசப்படுத்தவும், தளர்ந்த நம்பிக்கைகளையும் வளர்ந்து விட செய்து விடும் உயர்வான டானிக், பாட்டு கேட்பது, தெரிந்த பாட்டுக்களை பாடுவது போன்ற பொழுது போக்குகள் என்பதில் சந்தேகமிமேயில்லை. ஆண்டவன் அருள் இருந்தால்தான் ஞானம் என்பதும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Leave A Comment