ஒவ்வொரு மனித மனதிலும் அவரவர் தன்னுடைய லிமிட்டிற்கு மேலாக வாழ்க்கையில் சாதிக்க நினைத்து செயல்பட நினைக்கிறார்கள். ஆனால் நம் எந்த எண்ணங்களும், நிறைவேற நம்மனதும் ஒத்துழைத்து, கால நேரங்களும் நம்முடன் சேர்ந்துவிட்டதென்றால் அதைப்போல ஒரு அதிர்ஷ்டம் வேறெதுவும் இருக்கமுடியாது. விதி என்பது ஒரு சிலருக்கு எதுவுமே கை கொடுக்காமல், தட்டிக்கழிக்க பார்க்கும். அதை விடாமல் பிடித்து இழுத்துக்கொண்டு நின்று, அதை நம் கண்ட்ரோலில் வைத்துக்கொண்டு சமாளிக்கப்பார்க்கவேண்டும். நிறைய ஆட்களுக்கு இது சாத்தியமில்லை.மனதிற்குள் இருக்கும் நம்முடைய எண்ணக்குவியல்களுக்கும் இது சாத்தியமில்லை. நாம் செய்தே முடிக்க வேண்டுமென எண்ணமிருந்தால், மனிதர்களால் முடியாத செயல்கள் எதுவுமில்லை. காலநேரமும் ஒத்து வந்துவிட்டால் எதுவுமே கூடி வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சிலர் வீடு வாங்கவேண்டுமென சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே கொஞ்சம், கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பிப்பார்கள். ஆனால் அவர்கள் ரிடையர் ஆகும் வரை அவர்களால் எதுவுமே செய்யமுடியாமல் ஆகிவிடும். கையில் பணம் சேர்ந்தவுடன் உயிர் சிநேகிதரின் பெற்றோர்களில் ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்படும், அந்தநேரத்தில் நம்மிடமுள்ள பணத்தை கொடுத்து உதவ தோன்றுமென்பதில் சந்தேகமில்லை. நாம் ஒருவருக்கு உதவினால்தானே ஆண்டவன் நமக்கு கருணை காட்டுவார் என நினைத்து உதவ முற்படுவோம்.அதுவும் நல்லெண்ணம்தான்.
நல்லகாரியங்களுக்கும் கால நேரம் கூடி வரவேண்டும் என்பது பலருக்கும் புரிவதில்லை. பணமிருந்து விட்டால் எதையும் சாதித்துக்காட்டி விடமுடியுமென ஒரு சிலர் நினைக்கிறார்கள். அது சாத்தியமில்லை. நம்வாழ்க்கையில் எத்தனையோ ஆட்கள் கடினமான நேரத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். அதிகாரத்திலேயே காலத்தை ஓட்டப்பார்ப்பார்கள். அவர்களுக்கு கடினமான நேரத்தை கண்டவுடன் எதுவுமே புரிபடாமலிருக்கும். ஆகையால் அவர்களுக்கு எதையுமே கவனித்து செய்துகொள்ள முடியாமலும் போய்விடும். மேலும் தங்களுக்கு வேண்டுமென்பதை செய்துகொள்ள நேரமில்லாதும் போய் விடுகிறது. தன் சொந்த வீட்டில் தன் குடும்பத்துடன் வளமாக வாழ ஆண்டவன் கருணையுடன், நம்முன்னோர்களின் ஆசிகளும் கிடைத்தருள வேண்டும், என்பதில் சந்தேகமேயில்ல.
Leave A Comment