சங்கமம் என்றாலே நிறைய மனிதர்களுக்கு புரியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான சங்கமம் கிடைக்கிறது. எல்லோருடைய சங்கமமும் வெவ்வேறு விதமானவைகளே. காவேரி சங்கமத்திலிருந்து சிநேக சங்கமம் வெவ்வேறானது. ஆனால் நம் மனங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது துள்ளிக்குதித்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்து விடுகின்றன. அதே போலவே துக்கங்களிலும் மனம்ஆழ்ந்து துக்கித்து வாடும்போது நமக்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேச வேண்டியுள்ளது.
ஒரு சிலர் பேசும் முன்பு யோசிக்காமல், பேசிப்பேசி உறவை உடைத்து விட்டபின் நினைத்து,நினைத்து வருந்துவார்கள். காலம் ஓடிவிட்டபின் நாம் கடிகாரத்தின் முட்களை நேற்றைய மணி என்று திருப்பிவைக்கப்பார்க்கிறோம். உறவுக்குள் பிளவுகள் ஏற்பட்டு உறவுகள் கலைந்து போன பின்பு பற்றி கவலை பட்டு பிரயோசனமில்லை என புரிந்தும் அதையே நினைத்து கவலை படுவதுதான் சாதாரண மனிதர்களின் இயல்பு.
சிவசங்கரன் இந்தகுணங்களுக்கெல்லாம் விதிவிலக்கற்றவன் இல்லை.அவனும்நம்மைப்போன்ற சராசரி மனிதர்களுள் ஒருவனே. அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ உறவினர்கள், சிநேகிதர்கள் வந்தார்கள், போனார்கள். ஆனால் அதிலிருந்து எவரையும் தனக்கென நிறுத்தி வைத்துக்கொள்ள அவனுக்கு தோன்றவுமில்லை, நடுவில் வந்தவர்களும் அவனுடன் தங்க முயற்சிக்கவுமில்லை. வீடு, ஆபீஸ் என்று போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந்தான். அவனுடைய முதலாளி ஒருநாள் அவனிடம் பேச்சுக்கொடுத்து வாயைகிண்டி அவனுடைய வயதையும், கோத்திரத்தையும் கேட்டு, தன் அண்ணாவின் மச்சினனுடைய, மச்சினி
யின் வயதை கூறி, உனக்கு தெரிந்த அல்லது உறவினர்களின் குடும்பங்களில் நல்ல குணம் உள்ள பெண்ணிருந்தால் அவர்கள் வீட்டில் போய் பெண் ஜாதகம் கொடுத்து பிள்ளையின் ஜாதகம் வாங்கி வாயேன் என யதார்த்தமாக கூறினார். அவனுடைய ஜாதகம் இருக்கிறது என்று அவன்கூறியவுடன்பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது போல, மறுநாளே ஜாதக பரிவர்த்தனை நடந்து முடிந்து, அடுத்தநாள் சோதிரிடம் போய் காண்பித்தால் இத்தனை பொறுத்தங்களுடன் ஜாதகம் கிடைப்பதே அரிது, உடனடியாக மற்ற வேலைகளை நீங்கள் துரிதமாக செய்து அடுத்த மாதகடைசிக்குள் முகூர்த்தம் வைத்துக்கொள்ளலாம், என ஜாதகம் பார்த்தவரே கல்யாண ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டார். வேறு என்னகுறை என நினைப்பதுபோல கட்,கடவென்று துரிதமாக எல்லாவேலைகளும் நடக்க ஆரம்பித்தாகிவிட்டன. தேதி குறித்தாகிவிட்ட்டது, பந்தக்கால் முகூர்த்தம் முடிந்து விட்டது.
சிவசங்கரனுக்கு எதிர்பாராதவிதமாக ஆபீஸில் பிரமோஷன் கிடைத்தது. அவனுக்கும் பரம திருப்தி. ஆனால் அவனுக்கு அவனைப்பற்றிய ஒரு விஷயம் அவனுக்கே மறந்துவிட்டிருந்த படியால் அவனுக்கு ஞாபகம் வந்தபிற்பாடு ஒருவிதமான பயம் அவனை கவ்விக்கொண்டுவிட்டது. இப்போது எதிலும் அவனால் கவனம் செலுத்தமுடியவில்லை. மனது தவிக்கிறது. அவனுடைய சிறியவயதில் கிரிக்கெட் விளையாடும் போது அந்த பந்து படக்கூடாத இடத்தில் காயம் பட்டுஅவன் ஆயுளில் அவனுக்கு பிள்ளைபாக்கியம் கிடைக்காது என டாக்டர்கள் கூறியவார்த்தைகள் அவனுடைய காதில் ரீங்காரமிட்டுக்கொண்டேயிருந்தது. எங்கேயாவது ஓடிஒளியலாமா,இல்லை உண்மையை ஒத்துக்கவேண்டிய நேரம் வந்து விட்டதென தீர்மானித்து பெண் வீட்டாரிடம் கூற போனபோது பெண் வீட்டார் இவளுடைய ஆயுளில் இவளுக்குபிள்ளைப்பேறு கிடையாது, நாங்களும் உங்களிடம் பேசுவதற்காகத்தான் கிளம்பிக்கொண்டிருந்தோம் என கூறியவுடன் மனம் லேசாகி கல்யாணத்தையும் நன்றாக நடத்தி ஒரு பிள்ளையை தத்து எடுத்துக்கொடுத்து மீதிவாழ்நாட்களை செம்மையாக நடத்த இருதரப்பினரும் மனமார வாழ்த்தினர் என்பதை சொல்லவும் வேண்டுமா?
Leave A Comment