பல மனிதர்களுக்கு தன்னுடைய வாழ்க்கையில் எது முக்கியமானது தனக்கு வேண்டும் என்பது தெரியாமலே வாழ்ந்து வருவார்கள். காலம் நகர்ந்து கொண்டே போவதால் அவர்கள் தங்களுடைய கடந்த நாட்களை திரும்பிபார்த்து தங்களுக்கு வேண்டுமென்பதை அடைந்தேயாக வேண்டுமென்ற ஒரு எண்ணம் வந்து விடுகிறது. ஆனால் எது நியாயம், அநியாயம் என்பதை பற்றிய ஆவலும் எழுவதில்லை. மனோகர் ஒருநாள் தன் பழைய சிநேகிதனை காண சென்றபோது அவன்வீட்டில் அவனுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் டயம் போனதே தெரியவில்லை. சாப்பாடு வரவழைத்து ஜாலியாக சாப்பிட்டுவிட்டு டேய், டயமாகிவிட்டது நான் கிளம்புகிறேன் எனக்கூறி கிளம்பும் நேரத்தில், தன் வீட்டிற்கு போன்செய்து இதோ, கிளம்பிவிட்டேன் எனக்கூறியவன். திடீரென்று இருதயத்தை பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவன் விழுந்து விட்டான்.
நல்லகாலம், இந்த மோபைலிலிருந்து பேசியதால் வீட்டு போனும் கிடைத்து அவனுடைய டாக்டர் நம்பரை தெரிந்துகொண்டு ஆம்புலென்ஸில் எடுத்துக்கொண்டு ஓடினால் போகும் வழியிலேயே தலை தொங்கிவிட்டது. மனித வாழ்க்கை எத்தனை அநித்யமானது எனதெரிந்தும் வாழ்க்கையில் வேண்டாதவற்றிற்கெல்லாம் தகராறுகள் செய்து தன்மனதையும் நோக அடித்துக்கொண்டு பிறரையும் புண்பட பேசி நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம்.
நாம் தேடிவைத்தசெல்வத்தை நாம் அனுபவிப்போமா என்பதே தெரியாது. நாம் பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டில் நாம் வாழ்வோமா என்பது தெரியாது.நாம் பெற்று வளர்த்த பிள்ளைகள் நம்மை ஆதரிப்பார்களா என நமக்கு தெரியாது. நம்மிடம் கை கட்டிசேவகம் செய்தவர்கள் நம்மை கண்காணிப்பாக கவனித்துக்கொள்வார்களா எனதெரியாது. யாருக்குமே காலங்கள் ஓடுகின்றன, காட்சிகள் மாறி, மாறி போகின்றன.
நம் மனதும் விடாப்பிடியாக நினைத்தவைகளையே நினைத்து மறுகுகின்றன. காலம், நேரம், காட்சிகள் மாறி,மாறி வரும்போது நம்மனதும் அதற்கேற்றாற்போலவே வளைந்துகொடுத்து மாறி விடுகின்றன. ஆனால் எதுவும் நல்லபடியாக முடிவதற்குள் மண்டை உடைந்து விடுகிறதுதான் மீதமாகிறது.
Leave A Comment