பயங்களில் கொடுமையான பயம்,எது? சாவு வந்துவிட்டால் நான் எப்படி பிழைப்பேன் என்பதுதான். ஆனால் சாவு என்பது யாவருக்குமே முன் கூட்டியே நாள் நட்சத்திரம் பார்த்து தேர்ந்தெடுத்து வரும் விசேஷம் கிடையாது. வயதானால் மட்டுமே செத்து விடுவோம் என்பதும் கியாரண்டி கிடையாது. யமதர்மராஜா எவருக்கு எந்த நாளை குறித்து கூப்பிடப்போகிறார் என்பது எவருக்குமே தெரியாத ரகசியம். எத்தனையோ வயதானவர்கள், உடல் லொட லொடத்துப்போனாலும், மூச்சு நின்றால்தான் மட்டுமே உயிர் இழப்பு ஏற்படலாம் என தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள்.ஒரு சில பெரியவர்கள் இடி இடிக்கும் நேரத்தில், அர்ஜுனா,அர்ஜுனா என கூப்பிட்டால் அர்ஜூனன் அந்த இடியை வேறு எங்கேயோ அனுப்பி விடுவது போல் நினைத்து கூவுவார்கள். தனக்குள்ள பயத்தை போக்கிக்கொள்ள பிறரையும் கதி கலக்க வைக்க அர்ஜுனனை கூப்பிடுவார்கள், என கூறுவார்கள். ஆனால் யாவருமே இடிக்கு பயப்பட மாட்டார்கள். ஒரு சிலருக்கு கத்தியை தொட பயம். பலருக்கு வீட்டில் தனியாக இருக்க பயம். சிலருக்கு இருட்டில் பயம். சிலருக்கு நெருப்பை கண்டால் பயம். சிலருக்கு ஆபரேஷன் என்றால் பயம். பலர் பெண்டாட்டிகளை கண்டு பயந்து நடுங்குவது போல் நடிப்பார்கள். சிலர் வீரமாக எதிர்ப்பது போல் நடிப்பார்கள்.உண்மையில் பயத்தில் நடுங்குவார்கள்.

ஆனால் உண்மையில் எதற்குமே பயப்படாதவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். எதையும் எதிர்க்கும் மனது யாவருக்கும் கிடையாது. ஒரு சிலர் ஆவேசமாக பலர்முன்னிலையில் தொண்டை கிழிய கத்துவார்கள். ஆனால் தக்க நேரத்தில் கதிகலங்கி உட்காரந்துவிடுவார்கள். நம் ரத்த பந்தமே நம்மை உதறி எறியப்பார்க்கும். நாம் எதற்கும் தயாராக இருக்கவேண்டும். நம்முடைய பயம் பிறரின் பலமாகவும் இருக்கும். எந்தவிதமான குறைகளுமே அவரவர் அனுபவிக்கும் நேரம்தான் எப்படிப்டது என்பது புரியும். பிறருக்கு ஏதேனும் ஆபரேஷன் என்றால், இந்தநாளில் இந்த ஆபரேஷன் எல்லாம் நாம் நகம் வெட்டிக்கொள்வதற்கு சமானம் என்பார்கள். மிகவும் பயப்படுபவர்கள் கண்ணும்,காதும் வைத்தாற்போல் தன் வேலையை நடத்திக்கொண்டு வம்பளப்பார்கள். பலவிதமான மனிதர்கள் பலகோணங்களிலிருந்து பிரச்னைகளுக்கு முடிவு கட்டப்பார்ப்பார்கள். ஆகையால் எந்தவிபரத்தையுமே கண்ணும்,காதும் வைத்தாற்போல் செய்து முடித்துக்கொண்டுவிடவேண்டும். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வித நற்குணம், சற்குணங்கள படைத்தவர்களாக இருப்பார்கள். படிப்பதற்கும், கேட்பதற்கும் சரியாக இருப்பது நடைமுறைக்கு ஒத்துவருமா என பார்க்கவேண்டும்.இப்படியாக பீதியுடன் வாழ்பவர்களும் இருந்து வருகிறார்கள், கவலைகளை ஒதுக்க முடியாமல் கலங்கிகொண்டு வாழ்ந்து வருபவர்களையும் பார்க்கிறோம்.இப்படியாக பலதரப்பட்ட மனிதர்களையும் நம்வாழ்நாளில் ஒவ்வொருநாளும் வித,விதமான மனிதர்களை சந்தித்துக்கொண்டு வருகிறோம்.