சர்மா என்ற பெயுர் பொதுவான பெயர், ஆனால் சத்யமூர்த்தி சர்மா என்ற பெயருக்கு ஏற்றாற் போல் அவர் வாழ்ந்தும் காட்டியவர். அவர் இருக்குமிடத்தில் பொதுவாகவே கல,கலப்பு, அசல்,சல,சலப்பு எல்லாமாக இருக்கும். அவர் ஒரு பெரியகுடும்பத்தில் பத்து சகோதர, சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்து, மாலதி என்ற பெண்மணியை மணம் புரிந்துகொண்டு அமர்க்களமாக, வாழ்ந்து வரும் நேரத்தில், இரண்டு பெண்பிள்ளைகளுக்கு பிறகு, பிள்ளைக்காக ஆறுபடை வீடுகளை சுற்றி வந்து கார்த்திக் என்ற பிள்ளையையும் அடைந்து நன்கு வாழ்ந்தும், சொந்தவீடு வாங்கி அமர்க்களமாக வாழ்ந்து மறைந்து விட்டார்.
அவர் ஒரு பொறுமையின் சிகரம், உழைப்பால் உயர்ந்தவர். அவர் கார்த்திக் என்ற பிள்ளையை அவனுடைய இருபத்தியோராவது வயதில் விபத்தில் அடிபட்டு இறந்தபோது, எல்லாவற்றையும் இழந்தது போல் ஒரு பிரமை ஏற்பட்டு ஏதோ நடமாடிக்கொண்டு மறைந்தும் விட்டார்.ஆனால் அவருடைய நினைவுகள் எங்கள் யாவருடைய மனதையும் மிகவும் வாட்டுகின்றன. ரத்தபந்தத்தை விட சிநேகபந்தம் எங்களை ஆட்டுவிக்கின்றன. எதை மறக்கவேண்டும், என்பதற்கும் ஒரு முறை உள்ளது. எதையும் மறக்க ஒரு காரணம் வேண்டும். சில நினைவுகள் வாட்டிபடைக்கின்றன, சில நினைவுகளை, மறக்கப்பார்க்கிறோம், மறக்க முடியாமல் திண்டாடுகிறோம். இப்படியாக சத்தியமூர்த்தி என்னும் ஜீவன் எங்கள் மனதை விட்டு அகலமாட்டார், எங்கள் காலம் முடியும் மட்டும்.