விதி என்பது நம் எவருக்குமே புரியாத ஒன்று. ஆனால் ஏதாவது தாறுமாறாக நடந்தால் விதியின் மேல் பழியை போட்டுவிடலாம். விதியை மதியால் வெல்லலாம் என பெரியவர்கள் கூறிக்கேட்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். எது நடக்கவிருக்கிறதோ அது நடந்தே தீருகிறது. நடக்கப்போகும் எதையுமே நம்மால் தடுத்து நிறுத்தமுடியாத ஒன்று என்பது யாவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்தான். ஆனாலும் நம் பிடிவாதத்தில் நாம் தோற்றுப்போகாமலிருக்க அதையேநினைத்துக்கொண்டு ஜெயித்து விட்டாற்போல் பேசிக்கொள்கிறோம். முந்தைய நாட்களில் எலக்ட்ரிக் கனெக்ஷன் இல்லாதபோது கிராமங்களில் மனிதர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். மேலும் ஒருவருக்கொருவர் உபகாரங்கள் செய்துகொண்டும், ஒருவரையொருவர் அண்டிநிற்பதை சிநேக பூர்வமாக நினைத்தும், ஒற்றுமையுடன் மனதுக்கேற்றமாதிரி வார்த்தைகள். கூறிக்கொண்டும், எவரைக்கண்டாலும், அண்ணன், தங்கச்சி என கூப்பிட்டுக்கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். தன் வீட்டில் எது குறைந்தாலும் அக்கம்பக்கத்துவீடுகளிலிருந்து வாங்கிக்கொண்டும், மற்றவர்களுக்கு அவசியம் என தோன்றும்போது நாமும் முன் வந்து மற்றவர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என்றெல்லாம் நினைத்து வாழ்ந்து வந்த காலம் மலையேறிவிட்டது.
பழக்கங்கள் என்பது நாம் தினந்தோறும் என்னசெய்கிறோமோ அவைகள்தான், ஆனாலும் நாம் மாற்றியமைத்து செய்யும்போது நமக்கும் ஒருவித திருப்தியளிக்கும், மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் நம்முடன் இருப்பார்கள். ஒரே வேலையை பலர் பலவிதமாக செய்வார்கள். ஆனாலும் வேலை ஒன்றுதான் மற்றவர்களும் நம்வேலையில் மகிழ்ச்சியடையும் போது நாமும் கடு,கடு, வெடு,வெடுவென்று வெடித்துக்கொண்டு பேசாமல் பிரியமான குரலில் வார்த்தைகளை அன்பாக உதிர்த்தோமானால் மட்டுமே மற்றவர்கள் நம்மையும் பாராட்டி பேசி நம்மை மகிழ வைப்பார்கள். நாம் யாவருமே சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பங்கிட்டு பரிமாறிக்கொள்வதிலும் மனதுக்கு நன்றாக உள்ளது.
உறவினர்கள் என்றாலே இன்று பிள்ளைகளுக்கு தலைவலி போல தோன்றுகிறது. தன்னந்தனியாக இருந்தாலே மகிழ்ச்சியுடன் அவரவர்க்கு தேவையானவைகளை செய்துகொண்டு மகிழ்ச்சியாக உள்ளார்கள். இந்த டிவி என்பதொரு அரிய சாதனம் வந்தபிறகு பிள்ளைகளுக்கு வீட்டில் கசாமுசாவென்று பேச்சு வார்த்தைகளே பிடிப்பதில்லை. டிவியின் மோகத்தை மொபைல் போன் வந்து கெடுத்துவிட்டிருந்தாலும், அதன் மகிமை குறையவில்லை. இப்படியாக ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் ஒவ்வொரு மாறுதல்கள் கிடைத்து மனித வர்க்கம் மனமார வாழ்கிறார்கள்.
Leave A Comment