கனவுகள் காண்பதற்கு எவரும் தடை கூறமுடியாது. கனவுகள் நிறைவேறாவிடினும் மனிதகுலம் கனவுகாண்பதை எவராலும் தடை செய்யமுடியாது. கனவுகள் காணும் சாமர்த்தியம் நம் யாவருக்குள்ளும் உள்ளது என்பதை நிச்சயமாக முடிவெடுத்து கூறமுடியாது. ஆனால் கனவு நனவாகுமா என்பதற்கும் கியாரண்டி கிடையாது.நம் யாவருக்குமே கனவுகள் காண்பதற்கு தடைகள் கிடையாது. ஆனால் கனவுகள் நிறைவேறுமா என்பது நிச்சயமும் கிடையாது.ஆனாலும் ஆசைப்படுவதற்கு எவரும் தடை விதிக்க முடியாதே. நமக்கென கனவுகள் காணவில்லையானாலும், நாம் செய்துகாண்பிக்க முடியாதவைகளை நம் பிள்ளைகளாவது செய்து காண்பித்து விடவேண்டுமென்று பெற்றோர்கள் நினைப்பதில் தவறேதுமில்லை.ஆனால் நம் அபிலாஷைகள் பூர்த்தியாகுமா என்பது நம்கைகளில் இல்லை. நமக்கிருக்கிறாற் போலவே நம் பிள்ளைகளுக்கும் அவரவர்மனம்போல் படிக்கவோ வேலை செய்வதற்கோ மனம் வரவேண்டும்.
ஒருகாலகட்டம் மட்டுமே பெற்றோரின் மனம் போல பிள்ளைகள் செய்யமுன் வருவார்கள், பிள்ளைகள் வீட்டை விட்டு கிளம்பியதும் அவரவர் மனம்போல செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். ஆனதால் நாம் எதையும் எதிர்பார்த்து ஏமாந்தால் நம் தவறுதான், ஆகையால் பிள்ளைகளை குற்றம் கூறுவதில் பிரயோசனமில்லை. கூண்டு பறவைகளுக்கு வெளியுலக விவகாரங்கள் தெரிய ஆரம்பித்த பிறகு காலங்கள் மாறுகின்றன, காட்சிகளும் மாறி விடுகின்றன. சில காலகட்டங்களில் எல்லாமே தலை கீழாக மாறிவிடும் நிலைமை வந்தும் விடுகிறது. ஆகையால் நம் கனவுகள் எல்லாமே நிறைவேறிவிடப்போகிறது என நினைத்து ஏமாறவேண்டாம். ஒரு அளவுதான் நம் நம்பிக்கைகளை ஆண்டவன் செவிகொடுத்து கேட்கிறார், என நம்பித்தான் ஆகவேண்டும். ஒருகாலகட்டம் மட்டுமே நம் உட்ம்பே நம்மை மதித்து வேலைசெய்கிறாற் போல செய்துவிட்டு, உடல் தள்ளாடும் நிலை வந்ததும் நம்மை அப்படியே காலை வாரி விழும்படி செய்துவிடுகிறது. இதற்கு எவர் பதில் கூறமுடியும்? இதுதான் இயற்கையின் விதிகள் என்று நம் பெரியவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள், போலிருக்கிறது.
நாம் விளையாட்டுப்பிள்ளைகளாக இருக்கும் நேரம் நம்மால் எல்லாவற்றையுமே சாதிக்கும்படியான சாமர்த்தியம் உள்ளது என நினைத்து இறுமாப்பு கொள்கிறோம். ஆனால் ஒவ்வொரு வயதும் ஏறும் நேரத்தில் விதவிதமானபிரச்னைகள எழுகின்றன என்பதை அவைகளை எதிர் கொள்ளும் நேரம்தான் நமக்கு புரியவரும், இந்த உலகில் நம்மால் சாதித்துக்காண்பிக்க கூடியவைகள் குறைவே என்று. இந்த உண்மையை புரிந்து கொண்டு நடந்தோமானால் நமக்கும், நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும், நம் நலனையே கருதியிருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும்.
Leave A Comment