அடுத்த தடவை எப்போது வருவாய்? உனக்குப்பிடித்தவைகளை என்னால் எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை, ஆனால் தாய்மனம் அலை பாய்கிறது. ஊரிலிருந்து வந்த என் பெண் இன்றுஊருக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. வயது ஏறிக்கொண்டே போகப்போக மனது கலக்கம் அதிகமாகிறது, குழந்தைகளை விட்டுப்பிரியும் நேரத்தில். பிரிவும், சேர்க்கையும் வாழ்க்கையின் இருதுருவங்கள். ஆனால் தென்துருவம், வடதுருவம் போல்ஒன்றுக்கொன்று வெகு தூரத்தில் இல்லை ஆனாலும், இரண்டும் ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் சம்பந்தமில்லாது போல் உள்ளன. எதுவும் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாதபடி ஒரு வேதனை. பிரியப்போகிறோம் என தெரிந்த விட்டதால் ஏற்படும் மனோவேதனை. அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டால் அவரவருக்கு உத்யோகம்எங்கு கிடைத்துள்ளதோ அங்கு போனால்தான், அவருக்கு வேலையில் உயர்வு, ஊதிய உயர்வு எல்லாம் கிடைக்கும்போது, மனமகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். வாழ்க்கையில் முன்னேற்றத்தையே காணாதவர்களுக்கு தூரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி. ஒரு சிலர் எதையுமே எதிர்பாராது ஆடமேடிக் மெஷின் போலவும் வாழ்ந்துமடிகிறார்கள்.அவர்களுக்கு எதிலுமே வித்யாசம் தெரிவதில்லை. மாறுதல்களையும் எதிர்பார்ப்பதுமில்லை. மாறுதல்கள் கிடைத்தாலும் எடுத்துக்கொள்ள முயற்ச்சிப்பதுமில்லை.
பெற்றோர் என்ற ஜீவன்களுக்கு பிரிவு என்பதை ஒத்துக்கொள்ளமுடிவதில்லை. ஆனால் நமக்குப்பிடித்ததோ இல்லையோ ஒத்துக்கொண்டே ஆகவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. மனித மனதிற்கு சக்தி அதிகமாகவே உள்ளன. பெற்றோர்கள் நம்மை விட்டு வெளியூருக்கு போனாலும் நம்மை அவர்கள் வேலி கட்டிவைத்து காப்பாற்றுவது போல் நினைத்துஉருகுவார்கள். அவர்கள் தனியாக வாழ கிள்ம்புமுன் பெற்றோருக்கு மனகவலை அதிகமாகவேயிருக்கும். ஆனால் வீட்டை விட்டு கிளம்பிக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு புதியதொரு சாதனையை சாதிக்க கிளம்புவதைப்போல் உற்சாகமாக கிளம்பிக்கொண்டிருப்பார்கள். சிறகு முளைத்த பட்சிகள் உற்சாகத்துடன், ஆர்வமாக பறந்து திரிய ஆரம்பித்து விடுவதைப்போலவே பிள்ளைகளும் உலகத்தை சுற்றிவர கிளம்பிவிடுவார்கள். நாம் இருக்குமிடத்திலிருந்து கனவு கண்டு கொண்டு உட்கார்ந்து ஆசிகளை அனுப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். பட்சிக்கு இறக்கைகள் முளைத்தவிட்டன, வேற்று பட்சிகளைக்கண்டு பறக்கக்கற்றுக்கொண்டு சுதந்திரமாக பறந்து விட்டனர்.இந்த உற்சாகம் இல்லாவிடில் பிறமனிதர்கள் உயர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த இடத்திலேயே கிடக்கவேண்டியதுதான்.
Leave A Comment