காலத்தின் முன்னேற்றத்தை பற்றி எத்தனையோ மனிதர்கள் பேசுகிறார்கள். ஆனால் அதை மாற்றிவிட வேண்டும், என்ற எண்ணங்கள் எவருக்குமே தோன்றலாம். ஆனால் எதையுமே மாற்றுவது என்பது அத்தனை சுலபத்தில் செய்யக்கூடிய ஒரு சாதனை அல்ல. எதை எப்படி செய்துமுடிக்கலாம் என்பதை கற்றுக்கொடுத்து வரக்கூடிய கலையும் அல்ல. பண்டையகாலத்தில் படித்தவர்கள் இருந்திருந்தாலும், படிப்பு என்பது இருந்தாலும், பல மனிதர்களுடன் பேசிபழக தெரியாமலிருந்திருந்தது. மனிதர்களுக்குள்ள தரமேயில்லையானால், எவர்தான் நம்மை பொறுக்கியெடுக்க துணிவார்கள்.
ஆகையால் நம் முயற்சியிலும் நமக்கு பின் வாங்கும் தரக்குறைவு இருக்கக்கூடாது. விடாமுயற்சி மட்டுமேமனிதனை உயர்த்தப்பார்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை. நான்கு இடங்களில் ஏமாறும்போது எதைதள்ளிவிடவேண்டும், எதை நமக்காக இருத்திக்கொள்ளவேண்டுமென்பதும் மனிதர்களுக்கு புரிய வரும். கொள்கைகள் வைத்திருப்பதில் தவறேதுமில்லை, அந்த கொள்கைகளை எங்கு, எப்போது செயல் படுத்த முடியும், என்பதையும் புரிந்து செயல்படவேண்டும். நம்மைப்போலவே பலர் இருந்தாலும் நமக்கு தெரிந்தவர்களாக இருந்தால்தான் மட்டுமே நமக்கு பயன்படும்.
நிறைய மனிதர்கள் தனக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். பல மனிதர்கள் தன்தேவைகளை குறைத்துத்துக்கொண்டு, பிறருக்காகவே நேரம், காலத்தை கடத்திவருகிறார்கள். ஆகையால் தனக்கென வைத்திருக்கும் நேரம் மிகவும் குறைவே. அவர்களுக்கு தனக்கென நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை எனதோன்றுவதே மற்றொரு காரணம். இம்மாதிரியான எண்ணங்கள் உடையவர்கள் மிகவும் குறைவே. ஒருசிலரோ தனக்கென நேரம் ஒதுக்கிக்கொள்ள தெரியாதவர்களை தியாகிகள் என பெயரிட்டு கிண்டலும் செய்வார்கள். அவரவர் சுபாவம், அவர்களுக்கு கிடைத்துள்ள அனுபவங்கள், சிநேகங்கள் யாவையுமே வாழ்க்கையில் உதவக்கூடியவைகள். ஆனால் எந்த அனுபவத்திலிருந்தும் நமக்கு கிடைத்துள்ள பாடங்கள் அவ்வப்போது நினைவில் உதித்து நம்மனதிற்கு உதவக்ககூடும். ஆனால் நாம்மட்டுமே எந்தபாடங்கள் நமக்கு உதவக்கூடும் என்பதை முடிவு செய்துகொள்ள தெரியவேண்டும. வாழ்க்கையில் பிறர் கால்களில், அதாவது பிறரிடமிருந்து யோசனைகளை கேட்டு, கேட்டு செய்வது குறைவாக இருக்கவேண்டும்.
பிறரிடமிருந்து யோசனைகள் கேட்டு செய்பவைகளுக்கு நமக்கு எதுவும் முயற்ச்சிக்காமல் கிடைக்கிறது. ஆகையால் நாம் தவறாக பத்துமுறைகளில் முயன்று செய்வோம், நான் தவறை உணர்ந்துகொண்டேன் என்பதை நம்மால் மாற்றியும் செய்ய முடியும். ஆனால் பிறரைக்கேட்டு செய்யும் நேரம் பிறர் மீது பழிபோட்டு விட்டு உட்கார்ந்திருப்போம் தவற்றை உணர்ந்து, நம்மை திருத்திக்கொள்ள கிடைக்கும் நேரத்தை இழந்து விடுகிறோம்.தவறு என்ன என புரிந்தால்தானே தவற்றை திருத்திக்கொள்ளமுயன்று வெற்றியைக்காண்போம்.
Leave A Comment