மனமுதிர்ச்சி என்பது வருவதற்கு நமக்கு வாழ்க்கையில் அடிபட்டு, வித,விதமான மனிதர்களுடைய சேர்க்கையினாலும், வெவ்வேறு சுபாவமுள்ள மனிதர்களுடன் பழகி, நான் உனக்கு, நீ எனக்கு என்றெல்லாம் பேசி சிநேகம் செய்துகொண்டாலும் இது உண்மையான சிநேகமா என புரிவதற்கே நிச்சயமாக வருடங்கள் ஓடிவிடும் . எந்த மனிதமனமும் தனக்கில்லாமல் வாழும்நேரத்தில் பிறரைபற்றி நினைத்து வாழ்வது கடினமே. அம்மாதிரி வாழவேண்டுமானால், தியாகத்தில் மகாத்மா காந்தியை விட உயர்ந்த எண்ணங்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும். அந்த சுபாவம் மிகவும் குறைவான ஆட்களுக்கு மட்டுமே ஆண்டவன் அளித்திருக்கிறார். ஒரு சில மனிதமனதால் பிறர் நம்மிடம் கூறியுள்ள செய்திகளை தன்மனதில் வைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுவார்கள். ஒரு சிலர் காதில் விழுந்த வம்புகளுடன் கொஞ்சம் தன்னுடைய மசாலாவை சேர்த்து விஷயத்தை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக வெளியில் கூறுவார்கள். இதனால் கூறுபவருக்கும், கேட்பவருக்கும் லாபமோ, நஷ்டம் கிடையாது, ஆனாலும் தான் கூறும் விஷயம் யாவரையும் காது கொடுத்து கேட்பதற்கு ஆவல் இருக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே காரணம். இந்த பாழும் மனதிற்கு எதுவுமே தன்னால் முடித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை நிறைய ஆட்களுக்கு உள்ளது. இது வயது கோளாறும் அல்ல, உயர்ந்த எண்ணங்களும் கிடையாது. மனித மனம் அலைபாய்கிறது. வேறெதுவும் ரகசியங்கள் கிடையாது. மனதில் தோன்றுபவைகளை நடத்திக்காட்டும் சக்தி நமக்கு கிடையாது. நாம் ஒரு கட்டுக்கோப்பில் வாழ்ந்து வருகிறோம். அதிலும் அத்து மீறி வாழ நமக்கு அதிகாரங்களை எவரும் அள்ளிதரவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் கால் வைத்து முன்னேறும் நேரத்தில் நம் பொறுப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் கேட்கும் விஷயங்களை வெளியில் கூறலாமா, கூடாதா என்று கூட தரம் பிரிக்கத்தெரியாதவர்களை பற்றிபேசுவதில் அர்த்தமிருப்பதாக தெரியவில்லை.
Leave A Comment