கொரானா என்பது எல்லாவீடுகளிலும் உப்பு, புளி என்பது போல சாதாரண பேச்சுக்கள்  போலாகிவிட்டது. நம் தேசத்தில் வருடாவருடம் வித, விதமான வியாதிகள் வருவதும் போவதும் வழக்கமாகிவிட்டன. புது பெயர் எதுவும் கேட்காவிடில், இது என்ன பழைய வியாதிபோலவேதான்  இருக்கும் போலுள்ளது என நினைத்து, மற்ற வேலைகளைகவனிக்கப்போய்விடுவோம்.

நம்தேசத்தில் புதிய வியாதி திரண்டு வரும் நேரத்தில் பெருமையாக உள்ளது போலவே தோன்றும். ஏனெனில் உலகிலுள்ள மற்ற தேசங்களை விட நம் தேசத்தில் மக்களும்  அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் வியாதிகளும் வந்துகொண்டேயிருக்கின்றன.

மனிதர்களுக்கு மனதில் பீதி அதிகமாகிக்கொண்டே போகிறதே தவிர, கலக்கங்களை போக்கும் யுக்தி  மனதில் உதிக்கவில்லை. ஏனென்றால் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொள்ள எவருக்கும் பிடிப்பதில்லை. நம் வாயிலிருந்து வருபவைகள் இந்த நிலைமையில் ஒத்துவருமா என்பதும் புரியாத புதிர்தான். மனது வியாதிக்கும், மருந்துக்கும்    நடுவில் மாட்டிக்கொண்டு தவிப்பதுதான் மிச்சமாகிவிடுகிறது. ஆனாலும் கொரானாவைப்பற்றி பேசாதிருந்து விட்டோமானால் நமக்கு உலகவிபரமே தெரியவில்லையோ என  மற்றவர்கள் நினைப்பார்களோ என நம் மனமே நமக்கு எதிரியாக வேலை செய்கிறதோ   என்று நினைக்கத்தோன்றுகிறது.

வாழ்நாட்களில் எதையெல்லாமோ அனுபவித்தே ஆக வேண்டுமென்று ஆண்டவன் ஒரு நியதியை வைத்து விடுகிறான். அதன்படியே எல்லாம் நடக்கவும் நடக்கின்றன. நமக்கேற்றாற்போல் எதுவும் நடக்கவில்லையென்றால் நம் மனது வேதனையடைகிறது.  கொரோனாவை துரத்துவது  நம் குடும்ப  மனிதர்களை நமக்கு ஒத்து வராமலிருந்தால் துரத்தி விடுவது போன்ற விஷயமில்லை. கொரானா நம்மை பிடித்துக் கொண்டு விட்டால்   இரண்டிலொன்று முடிந்தே தீரும், என்பதே நிச்சயம். ஆனால் வருடா வருடம் மருந்தே கண்டறியாத வியாதி ஏன் நம் தேசத்தில் பரவ வேண்டுமென எந்த ஆண்டவர்கள் சாபம் கொடுத்தார்களோ, தெரியவில்லை.

நமக்கு ஒத்துவராத உறவினர்களை நம்முடன் இருக்கவிடாமல் துரத்திவிடலாம், ஆனால் நம்மை பிடித்துக்கொண்ட வியாதியை எப்படிதவிர்ப்பது என்பது ஒரு புரியாத புதிர்தான்.