உங்களில் பலருக்கும் பாட்டியம்மா என்றால் வாயும், வயிறும் ஒட்டிப்போய், கன்னங்கள்வாய்க்குள் மாட்டிக்கொண்டிருப்பது போன்ற தோற்றமே மனதில் உதிக்கலாம். ஆனால் இந்த பாட்டியம்மா  1930 இல்லை 1935ல் ஆங்கிலேயர்   நம்மை ஆண்ட நாட்களில்  வளர்ந்தவள். உலக விபரங்களில் மனம் ஈடுபட்டு எதைப்பற்றி பேசினாலும் பேச்சுக்குப்பேச்சு பதில் கூற முற்படுவாள். எங்கள் பாட்டியம்மா அறிவின் களஞ்சியமாக விளங்கி வாழ்ந்தவள் எனக் கூறினேயானால் அது மிகையாது. தினம் செய்தித்தாள் படிக்காமல் பாட்டியம்மாவின் நாள் நகராது. சும்மா ஏதோ தர்க்கவாத்த்திற்காக, பேசுவதற்காகவும் பேசமாட்டாள். உலக விபரங்களை பிள்ளைகளுக்கு உணர்த்தவேண்டுமென்ற ஆர்வத்துடன் பேசி உணர்த்தப்பார்ப்பாள் .

காலத்திற்கேற்றாற் போல் தங்களை மாற்றிக்கொண்டு வாழக்கற்றுக்கொள்ளவேண்டுமென்பாள். பாட்டியம்மாவுடன் கூடபிறந்த சகோதரிகள் ஐந்து பேர் என்பது என்ஞாபகத்தில் உள்ளது.  அந்தசகோதரிகள் ஒருவருக்கொருவர் அடிக்கடி வந்து போய்க்கொண்டு, குடும்ப விவகாரங்களை பறிமாறிக்கொண்டும் இருந்திருக்கிறார்கள்.   மூத்த சகோதரியின் பிள்ளையை அவர்கள் பெற்றோர்கள் தத்து எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும்   குறிப்பிடத்தக்கது. அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவைகள்  பல இருந்த போதிலும் எவருக்கு எது வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்ந்தோம் . பாட்டியம்மா என்று படிக்கும்போது, உங்களில் பலருக்கும் மனதில் தோன்றலாம், பாட்டியம்மாவைப்பற்றி என்ன இருக்கும் எழுதுவதற்கு என்று?

இந்த உலகில் பிறந்து வளர்ந்த ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள எத்தனையோ உள்ளன. ஆனால் அவரவர் மனதில் எது பிடித்தமானதோ, அதை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவைகளை ஒதுக்கிவிடவேண்டியதுதான். நமக்கு பிடித்தாற் போலவே எழுதவேண்டுமென்று எவரும் எழுத முடியாது. எங்கள் பாட்டியம்மா அறிவின் களஞ்சியமாகவே திகழ்ந்திருந்தாள் என்பதை எவருமே மறுக்கமுடியாது. அந்த சகோதரிகளின் ஒற்றுமையை இன்றும் நினைத்துப்பார்ப்பேன். மனமகிழ்ச்சியும் அடைவேன். சுதந்திர இந்தியாவின் வீழ்ச்சியை பற்றி நிறைய கதைகளும் சொல்வார். தன் பிறந்த வீட்டின், மற்றும் தன் சகோதர, சகோதரிகளின் பாரம்பரிய பண்புகளையும் எடுத்துக்கூறி மகிழ்வடைவாள் . சகோதர, சகோதரிகள் இருந்ததால் அந்த உறவின் மகிமையை  விஸ்தாரமாக பேசி, ஒவ்வொரு உறவின் மகிமையையும்   எடுத்துக்கூறி எங்களையும் உற்சாகப்படுத்துவாள்.   மூன்று  மருமகள்களையும் ஒரே மாதிரியாக நடத்தியதாக எங்கள் தாயாரும் கூறுவார்.     கிராமத்தில் நில புலன்கள் இருந்தபடியால், பெரிய பிள்ளையை BA,  இரண்டாவது பிள்ளையை ஹைவேஸ் என்ஜியருக்கும் படிக்கவைத்தார்களாம். கடைக்குட்டி பிள்ளையை கிராமத்தில் வைத்துக்கொண்டு நில புலன்களை மேம்பார்வையிட வைத்துக்கொண்டார்களாம்.

பாட்டியம்மா அறிவின் களஞ்சியமாக வாழ்ந்தார். அவருடைய  காலத்தில் அவர்களுக்கு பாடங்கள் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் வீட்டிற்கு வருவார்களாம். பணத்திற்கு பதிலாக நெல் மூட்டைகள் கொடுப்பார்களாம், வருடத்திற்கு எத்தனை மூட்டை அரிசி அவசியமோ அத்தனை மூட்டை  அரிசி கொடுப்பார்களாம். அவர்கள்  ஐந்து சகோதரிகள். யாவரையும்      அருகிலுள்ள கிராமங்களிலேயே கல்யாணம் செய்து வைத்து சமயசந்தர்பங்களில் உடனடியாக ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும்படியாகவும் வாழ வேண்டுமென கூறி உபதேசிப்பார்களாம். இப்படியாக ஒரு நல்ல குடும்பத்தில் பிறப்பெடுத்ததற்காகபெருமையடைகிறேன்.