நம் வாழ்நாளில் எதையும்  எதிர்பார்த்து ஏமாந்திருந்தாலும் எதிர்பார்ப்பதை நம்மால் தடுத்தி நிறுத்தமுடியாது  என்னும் உண்மையை  மறுக்க முடியாது. நமக்கு கிடைக்கவில்லை என்பதால் யாவருக்குமே இப்படித்தான் இருக்கும் எனவும் கூறி விட முடியாது. ஆனால்கிடைத்துள்ளவர்களை  உதாசீனம் செய்யும்  பழக்கத்தையும் விட்டு விடவேண்டும். ஏனெனில் மனித வாழ்க்கையில் உதாசீனம் செய்வது என்பது ஒரு சகஜமான பழக்கமே. ஆனால் நம்மால் உதாசீனப்பட்டவர்கள் எந்தமனோநிலையில் இருந்திருப்பார்கள் என நம் அறிவுக்கு எட்டியமட்டும் சிந்தித்துப்பார்க்கவேண்டியது அவசியமே. நாம் சிந்தித்துப்பார்த்து வருந்துகிறோம் என்பதற்காக செய்த தவறுகளையே செய்துகொண்டும் மற்றவர்களை நம் சொற் கணைகளால் வருந்தவும் வைக்கக்கூடாது.  தவறு என்பதை உடனுக்குடன் திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம், அறிவாளியின் அடையாளமும் கூட. மேலும் மற்றவர்கள் நம்மிடமிருந்தே  வேண்டாதவைகளை கற்றுக்கொண்டதாகவும் கூறுவார்கள்.  இந்த பரந்த உலகில் நற்செயல்களை விட,  துர் செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.     பிறர் செய்து வருவதைக்கண்டு நாமும் செய்து விடமுடியும் என்பதற்காக செய்யக்கூடாது.  நமக்கென கிடைத்திருக்கும் அரிய சிநேகிதங்களையும் இழந்து விடக்கூடாது.

நமக்கு தேவையே இல்லாத எதிலுமே தலையிட்டு பேசுவதையும் தவிர்க்கவேண்டும்.சில நேரங்களில் சிலவற்றை நாம் தவிர்த்து வாழவும் கற்றுக்கொள்ளவேண்டியதாகிறது. நான்கு மனிதர்களுடன் பேசும்போது நாம் நினைத்துக்கூறுவதையே மேலும் ,மேலும் பேசக்கூடாது. எவருக்குமே  மனம் நிறைவடையாது.  அதற்காக  எவராவது தவறாக பேசினாலும் உடனே பட்டென்று அவர்கள் வாயை அடைக்கிறாற் போலவும் பேசி மற்றவர் மனதை புண்படுத்திவிடக்கூடாது.